தோல்விக்கு உரிய நாடல்ல இலங்கை! பிரித்தானியா குத்துக்கரணம்!
இலங்கையை தோல்விக்கு உரிய நாடு ஒன்று பிரித்தானியா ஒருபோதும் குறிப்பிட்டு இருக்கவில்லை என்று தெரிவித்து உள்ளார் இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் ஜோன் ரங்கின்.இந்நாட்டில் வெற்றிகரமான பொருளாதாரம் காணப்படுகின்றது, ஜனநாயக முறைப்படி தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி ஆட்சியில் உள்ளார் என்றும் தூதுவர் தெரிவித்து உள்ளார்.
“Ask the High Commissioner” என்கிற பெயரில் காணொளி விளக்க தொடர் ஒன்று தூதரகத்தால் வெளியிடப்பட்டு வருகின்றது.
இலங்கை தொடர்பான நிலைப்பாடு தொடர்பில் இக்காணொளித் தொடர் மூலம் அவதானிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டு வருகின்றது.
நேற்று வெளியிட்டு இருந்த காணொளியிலேயே இலங்கை தொடர்பாக இவ்வாறு தெரிவித்து இருக்கின்றார்.
No comments:
Post a Comment