Translate

Sunday, 18 March 2012

அமைச்சர் வீரவன்ச கூறுவது, தான் நிர்வாணமாக இருந்து கொண்டு ஊரை உடையணியச் சொல்லும் செயல் : ஜே.வி.பியின் மாற்றுக்குழு!


அமெரிக்கர்கள் அமெரிக்க குடியுரிமைகளை வைத்துள்ளனர். அதே போன்று அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவியும் 15 ஆண்டுகளுக்கு அமெரிக்காவில் வாழக்கூடிய நிரந்தர வீசாவைப் பெற்றுக் கொண்டுள்ளார். இவ்வாறானதொரு சூழ்நிலையில் சாதாரண மக்களை கூகுல் மற்றும் ஜீமெயில் போன்ற இணையத்தளத்தை பாவிக்க வேண்டாம். கோலா குளிர் பானத்தைக் குடிக்க வேண்டாம் என்று அமைச்சர் வீரவன்ச கூறுவது, தான் நிர்வாணமாக இருந்து கொண்டு ஊரை உடையணிக் கூறுவதைப்போன்ற செயற்பாடாகும் என்று ஜே.வி.பியின் மாற்றுக்குழு குறிப்பிட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்தை விட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் தான் மிகவும் மோசமானதும், ஆபத்தானதுமான ஒப்பந்தங்களை அமெரிக்காவுடன் மேற்கொண்டுள்ளது. எனவே ஜெனீவா பிரேரணை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் என்பன அமெரிக்காவினதும் அரசாங்கத்தினதும் கூட்டு நாடகம் என்றும் அக்குழு தெரிவித்துள்ளது.
நிப்போன் ஹோட்டலில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டின் போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது. இங்கு உரையாற்றிய ஜே.வி.பி. மாற்றுக் குழுவின் செயற்பாட்டாளர் சமீர கொஸ்வத்த கூறுகையில்:
மனித உரிமை மீறல் மற்றும் ஜனநாயக விரோத ஆட்சி என்பன இன்று இலங்கையை சர்வதேச மட்டத்தில் தலைகுனிய வைத்துள்ளது. யுத்தத்தின் பின்னர் வடக்கு, கிழக்கில் 1500 பேருக்கு அதிகமானோர் காணாமல் போயுள்ளனர். அதேபோன்று கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். 600க்கும் அதிகமான பெண்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளனர். தற்போதும் வெள்ளை வேன் கடத்தல்கள் காணாமல் போதல் என்பன தொடர்கின்றது.
கொலன்னாவை நகரசபைத் தலைவரின் கடத்தலுடன் வெள்ளை வேனின் பின்னணியும் தெரிய வந்துள்ளது. அரசாங்கம் தனது இராணுவத்தைப் பயன்படுத்தி அரசியல் கொலைகள் மற்றும் ஆள் கடத்தல்களில் ஈடுபட்டு வருகின்றது.
உலக நாடுகள் இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல் பிரேரணைகளை நிறைவேற்றுகையில் அதனை உறுதி செய்யும் வகையில் அரசாங்கம் வெளிப்படையாகவே தனது வெள்ளை வேன் கலாசாரத்தை நிறைவேற்றி வருகின்றது. இதனால் தான் அமெரிக்கா போன்ற நாடுகள் வெளிப்படையாகவே இலங்கைக்கு எதிராக செயற்படுகின்றன.
அமெரிக்காவைக் கண்டிக்க சாதாரண மக்களைப் பயன்படுத்தும் அரசாங்கம் அமைச்சர்களின் அமெரிக்க குடியுரிமைகளை ரத்துச் செய்யக் கோருவதில்லை.

No comments:

Post a Comment