காணாமல் போன 30 பேர் பற்றிய தகவல்களை வழங்குமாறு அமெரிக்கா இலங்கை அரசாங்கத்திடம்  கோரியுள்ளது.  இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தின் ஊடாக இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.


சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் சார்பில் அமெரிக்கத் தூதரகம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளது. குறித்த காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு இலங்கை அரசாங்கம், காவல்துறையினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.காணாமல் போன 30 பேர் பற்றிய தகவல்களை அமெரிக்கத் தூதரகம் கோரியுள்ளது.
குறித்த பட்டியலில் குறிப்பிடப்பட்ட நபர்கள் பற்றி முழுமையான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என சிறீலங்கா அரசாங்கம் வாக்குறுதி அளித்துள்ளது.
காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்களிடம் காவல்துறையினர் விசாரணைகளை நடத்த உள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் காணாமல் போன லலித் குமார் மற்றும் குகன் ஆகியோர் பற்றிய தகவல்களை வழங்குமாறு அமெரிக்கா கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.இந்த இருவர் பற்றிய எந்தவிதமான தகவல்களும் கிடையாது என சிறீலங்கா அரசாங்கம் உத்தியோகபூர்வமாக பாராளுமன்றில் அண்மையில் அறிவித்திருந்தது.