Translate

Tuesday, 3 April 2012

நோர்வே செஞ்சிலுவைச் சங்கம் இலங்கையில் இருந்து வெளியேற்றம் !

இலங்கையின் பல பிரதேசங்களிலும் அனர்த்த காலங்களில் பல்வேறு தொண்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்த நோர்வே செஞ்சிலுவை சங்கம் கடந்த 31 ஆம் திகதியுடன் தமது பணிகளை முடித்துக்கொண்டுள்ளது என அதிர்வு இணையம் அறிகிறது. சுனாமி மற்றும் யுத்த அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வாழ்வாதார மற்றும் மீள் கட்டுமாணப் பணிகளில், நோர்வே செஞ்சிலுவைச் சங்கம் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்க விடையமாகும்.


சுனாமியால் முற்றாக அழிந்த காத்தான்குடி மாவட்ட வைத்திசாலை நோர்வே செஞ்சிலுவை சங்கத்தின் 670 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. தற்போது இச் செஞ்சிலுவைச் சங்கம் தனது பணிகள் யாவும் முடிவுற்றதாக அறிவித்து, இலங்கையில் இருந்து வெளியேறவுள்ளது.

No comments:

Post a Comment