கிழக்கு மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடத்துவதற்குத் தீர்மானித்திருக் கும் அரசு, ஸ்ரீலங்கா முஸ் லிம் காங்கிரஸின் தலைவ ரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமை அரசின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்துவதற்கும் திட்டமிட்டுள்ளது என்று அலரிமாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக ஜனாதிபதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட அமைச்சர்கள் சிலருடன் ஆலோ சித்து வருகிறார் என்றும் ஹக்கீமை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்துவ தன் மூலம் அரசுக்கான வெற்றிவாய்ப்பு அதிகரிக் கும் என அவர்களிடம் ஜனாதிபதி எடுத்துக்கூறியுள்ளார் என்றும் அத்தக வல்கள் தெரிவிக்கின்றன.
கிழக்கு மாகாணத்தில் தமிழ் முஸ்லிம் மக்களின் விருப்பத்திற்குரிய ஒருவராக ஹக்கீம் இருப்பதால், அரசின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக அவரை நிறுத்துவதே கிழக்கு மாகாணத்தை அரசு கைப்பற்றுவதற்கான சரியான நகர்வாக அமையும் என்று ஜனாதிபதி அந்த அமைச்சர்களிடம் கூறியுள்ளாராம். இத்தகவலை அறிந்த அரசுடன் இணைந்துள்ள ஏனைய முஸ்லிம் கட்சிகள், முதலமைச்சர் வேட்பாளராக ஹக்கீம் நிறுத்தப்படுவதை விரும்பவில்லை என்று அறியமுடிகின்றது.
இது தொடர்பில் ஜனாதிபதி தமது கட்சிகளின் ஆலோசனைகளை உள்வாங்கியே இறுதி முடிவை எடுக்கவேண்டும் என்று முஸ்லிம் கட்சிகளின் முக்கியஸ்தர்கள் சிலர் நேற்று “சுடர் ஒளி”யிடம் தெரிவித்தனர்.
கிழக்கில் தமது கட்சிகளுக்கு தமிழ் முஸ்லிம் மக்களிடையே நல்ல ஆதரவு உள்ளதால் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் நாம் முக்கிய இடத்தை வகிக்கப்போகின்றோம். ஆகவே, அரசு எடுக்கும் தீர்மானத்தில் எமது கருத்துகள் உள்ளடக்கப்படவேண்டும் என்று அக்கட்சிகள் தெரிவித்துள்ளன.
இதேவேளை, ஹக்கீமை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்துவதென்ற ஜனாதிபதியின் தீர்மானம் சரியானதே என்றும் கிழக்கு மாகாணத்தைக் கைப்பற்றுவதற்கான சரியான நகர்வு இதுவென்றும் சில அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்
No comments:
Post a Comment