புலிகள் விடுதலை: மாடல் பெண்களை வாடகைக்கு அமர்த்திய அரசு !
புணர்வாழ்வளிக்கப்பட்ட புலிகள் உறுப்பினர்கள் சிலரை தாம் விடுவிப்பதாக இலங்கை அரசு அறிவித்திருந்தது. நேற்றைய தினம் கொழும்பு வெள்ளவத்தையில் உள்ள ராமகிருஷ்ன மண்டபத்தில் இந் நிகழ்வு நடைபெற்றது. சுமார் 380 பேர் இதில் விடுவிக்கப்பட்டனர். இந் நிகழ்வுகளில் பெண் போரளிகளை நாகரீக உடைகள் அணிந்து வரும்படி இராணுவத்தினர் பணித்திருந்தனர்.
இருப்பினும் பல பெண் போராளிகள் இதற்கு மறுப்புத் தெரிவித்துவிட்டனர். இறுதி நேரத்தில் பல மாடல் அழகிகளை இலங்கை அரசு வாடகைக்கு அமர்த்தி, இந் நிகழ்வுகளை கிளு கிளுப்புக் குறையாமல் நடத்தி முடித்துள்ளது என அதிர்வு இணையம் அறிகிறது.இந் நிகழ்வுகளில் கலந்துகொண்ட மாடல் அழகிகளில் ஒருவர், சான்றிதழ்களை கையில் எடுத்து கொடுப்பதை படத்தில் காணலாம். குறிப்பிட்ட இச் செய்தி சிங்கள இணையங்களில் வெளியாகியுள்ளது. பரிசுகளை வழங்கும் சிங்களப்பெண்ணை, விடுதலைப் புலிகளின் பெண் போராளி என நினைத்து பல சிங்கள இளைஞர்கள் இச் செய்திக்கு பின்னூட்டங்களை(காமென்ஸ்) கொடுத்துள்ளனர். இதில் ஒரு சிங்கள இளைஞர், இப்படியான பெண்கள் புலிகள் இயக்கத்தில் இருந்திருந்தால், விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தானும் சேர்ந்திருப்பேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதைத் தவிர மற்றுமொரு விடையமும் நேற்று நடந்தேறியுள்ளது. இன் நிகழ்வுகளுக்கு பாதுகாப்பு வழங்கவென பல இராணுவத்தினர் நேற்று அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலர் சரியான இடத்தில் சிறுநீர் கழிக்கவில்லையாம். சிறுநீர் கழிக்கும் அறையைக் கண்டு பிடிக்க முன்னரே அக்கம் பக்கத்தில் உள்ள இடங்களில் இந்த இராணுவத்தினர் சிறுநீர் கழித்ததால், ராமகிருஷ்ன மண்டபத்தின் ஏனைய பகுதிகள் நாறுவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment