Translate

Monday 9 April 2012

மேற்குலக நாடுகளின் அழுத்தங்கள் காரணமாகத்தான் அரசாங்கம் ....


மேற்குலக நாடுகளின் அழுத்தங்கள் காரணமாகத்தான் அரசாங்கம் ஆணைக்குழுவை நியமித்தது என்று மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லால் காந்த தெரிவிப்பு


கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையினை மக்கள விடுதலை முன்னணி நூற்றுக் நூறு விகிதம் நிராகரிக்கின்றோம். நாங்கள் அந்த அறிக்கையினை ஏற்றுக் கொள்வதில்லை.
நாங்கள் அறிக்கையில் உள்ள சில விடயங்களில் ஒன்றுபட்டுள்ளோம். உதாரணமாக சுயாதீன ஆணைக்குழு சபை நாட்டுக்கு அவசியம். இதில் நாங்கள் அவ்வாறு கூறுவது கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையில் இருப்பதற்காக அல்ல.
 
ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் மேற்குல நாடுகளுடைய வேண்டுகோளின் காரணமாகத்தான் அரசாங்கம் இதற்காக ஆணைக்குழு நியமித்தது. அது இல்லாமல் இவ்வாறான ஆணைக்குழு நியமிப்பதற்கு அரசாங்கத்திற்கு தேவையாக இருக்க வில்லை. எவ்வாறாயினும் மேற்குலக நாடுகளின் அழுத்தத்தின் காரணமாக ஆணைக் குழுவை நியமிப்பபதற்கு கடைசியாக அரசாங்கத்திற்கு ஏற்பட்டது. அதுவும் அவர்களுடைய
 நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப செயற்படுத்தப்பட்டது.
 
22 வது மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படவுள்ள அறிக்கையினைத் தயாரிப்பது ஜீ. எல், மஹிந்த சமரசிங்க இல்லை. மனித உரிமைப் பேரவையில் இலங்கை  எதனை இணக்கத்துடன் நடவடிக்கை எடுத்தது எனக் கூறும்  ஒன்று கற்றுக் கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையின் பரிந்துரைகளை செயற்படுத்தபட்டுள்ளதாக என்ன ஏது எனக் கூறும் ஒன்றே அந்த அறிக்கையில் தெரியும்.
 
மறுகையில் இலங்கைக்கு எதிராக நிறைவேறிய தீர்மானம் கூறும் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சாதாரண விடயங்கள் செயற்படுத்தக் கூறப்படுகிறது. இவ்விடத்தின் போது அவர்கள் சாதாரணமாகக் கூறும் எதிர்பார்ப்பு விடயங்கள் எங்களுக்கு சாதாரண விடயங்கள் அல்லாமல் இருக்கலாம்.
 
எப்படியாயினும் சரி அரசாங்கம் செய்ய வேண்டிய விடயங்கள் பல உள்ளன. சனநாயகத் தன்மையை ஏற்படுத்தல் வேண்டும். மனித உரிமை செயற்படுத்த வேண்டும். வடக்கு கிழக்கு பகுதியில் சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்தல் வேண்டும். அப்போது அமெரிக்கா கொண்டுள்ள இடத்தின் பிரசையாக அந்த விடயங்கள்  எல்லாம் எதிர்பார்க்கப்படும். எங்களுக்கென்றால் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க
 ஆணைக்குழுவின் அறிக்கை பொருத்தமாகப் பட வில்லை.

No comments:

Post a Comment