Translate

Monday 23 April 2012

செங்கல்பட்டு சிறப்பு முகாமுக்கு அவசரமாக மருத்துவர் வருகை. மனிதம் அமைப்பின் வேண்டுகோளை உண்ணாநிலை ஏதிலி ஏற்றார்


செங்கல்பட்டு சிறப்பு முகாமுக்கு அவசரமாக மருத்துவர் வருகை. மனிதம் அமைப்பின் வேண்டுகோளை உண்ணாநிலை ஏதிலி ஏற்றார்

செங்கல்பட்டு சிறப்பு முகாமில் இன்று எட்டாம் நாள் மாலையில் உண்ணாநிலையில் இருந்து வரும் 13 ஈழ ஏதிலிகளில், மூன்று பேருக்கு உடல்நிலை சோர்வுற்று மோசமானது. சிலருக்கு மயக்கம் வந்துள்ளது.

மோசமாக பாதிக்கப்பட்டுள்ளோரில், சதிஸ் குமாருக்கு ஏற்கெனவே கிட்னி நோயால் அவதியுற்று வருகிறார்.  பராகரனுக்கு வலிப்பு நோய் உள்ளது. இதில் சதிஸ் குமார் இன்றோடு எட்டு நாட்கள் உண்ணாநிலையில் இருந்து வருகிறார். பராகரன் கடந்த வெள்ளியன்று உண்ணாநிலையில் பங்கெடுக்கிறார்.

சோர்வுற்ற நிலையை மாவட்ட நிர்வாகம் அறிந்து கொண்ட நிலையில், இன்று மாலை 6 மணிக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவர் ஒருவர் அவசரமாக சிறப்பு முகாமிற்கு வந்து எல்லோரையும் பரிசோதித்து சென்றார்.

உண்ணாநிலையில் இருப்போருக்கு உடல் மோசமானால், மருத்துவமனைக்கு அரசு தரப்பு அழைத்து செல்லும். அப்படி வரும் நாட்களில் மருத்துவமனைக்கு சென்றாலும், தங்களது உண்ணாநிலை தொடரும் என்று உண்ணாநிலையில் இருந்து வரும் அனைவரும் உறுதியோடு இருக்கின்றனர்.

உண்ணாநிலை குறித்து இன்று முன்னால் முதல்வர் திமுக-வின் அதிகாரபூர்வ ஏடான முரசொலியில் நாளை வெளிவர உள்ள கேள்வி பதிலில் செங்கல்பட்டு சிறப்பு முகாம் குறித்த பதிலில், ""நான் முதல்வராய் இருந்த போது, செங்கல்பட்டு சிறப்பு முகாமிலிருந்த ஏதிலிகளை மாதம் ஒரு முறை குழு, குழுவாய் விடுதலை செய்தேன். ஆனால், அதிமுக அரசு, விடுதலை பற்றி ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை", என சிறப்பு முகாம் வாசிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.

மனிதம் அமைப்பின் தலைவர் திரு. அக்னி சுப்பிரமணியத்தின் வேண்டுகோளுக்கிணங்கி, புதன்கிழமையன்று மரமேறி தூக்கிலிடும் நிலையிலிருந்து சிறீ செயன் மனதை மாற்றிக் கொண்டு, இப்போராட்டத்தை நிறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment