Translate

Sunday, 8 April 2012

செந்தமிழன் சீமானும் உறங்காப் புலி வை.கோபாலசாமியும் இல்லாவிட்டால் இது நடந்திருக்காது!


செந்தமிழன் சீமானும் உறங்காப் புலி வை.கோபாலசாமியும் இல்லாவிட்டால் இது நடந்திருக்காது!

…………………………..சமீப நாட்களாக இலங்கை அரசியல் சூழலில் ஒரு வகையான திகில் அனுபவத்தை வழங்கிக் கொண்டிருந்த ஜெனீவா அரசியல் ஒருவாறு முடிவுக்கு வந்துவிட்டது. தெற்கின் சிங்கள தேசியவாதக் தரப்பினரை கவலைக்குள்ளும் தமிழ் தேசியவாத சக்திகளை மகிழ்ச்சிக்குள்ளும் தள்ளும் வகையில் ஜெனீவாவின் முடிவு அமைந்திருக்கிறது. 47 நாடுகளை உறுப்பினராக கொண்டிருக்கும் ஐ.நா.வின் மனித உரிமைகள் பேரவையில் 24 நாடுகளின் ஆதரவைப் பெற்றதன் மூலம் இலங்கையின் மீதான அமெரிக்கப் பிரேரணை வெற்றிபெற்றுவிட்டது. இந்த பிரேரணையின் அரசியலை நாம் எவ்வாறு விளங்கிக் கொள்ளப் போகின்றோம். ஆனால் நம் மத்தியில் நடந்து கொண்டிருக்கும் சூடான விவாதங்களை பார்த்தால் இந்த பிரேரணையின் அரசியலை எவருமே விளங்கிக் கொண்டதாகத் தெரியவில்லை,……………………………..”

இதுவரை இந்தியா கொழும்பை திருப்திப்படுத்துவதையே தனது முதன்மையானதொரு அணுகுமுறையாக கடைப்பிடித்து வந்தது. ஆனால் ஜெனீவா விடயத்தில் இந்தியா அத்தகையதொரு முடிவை எடுக்கவில்லை. இதனையும் நாம் மேற்படி அமெரிக்காவின் ஆசியா நோக்கிய மூலோபாய நகர்வுகளின் பின்னணியிலேயே உற்று நோக்க வேண்டும். இன்றைய ஒழுங்கில் அமெரிக்கா தனது மிக முக்கிய மூலோபாய பங்காளியாக இந்தியாவையே கருதுகிறது. பராக் ஒபாமாவின் வார்த்தையில் சொல்வதானால் இந்தியஅமெரிக்க உறவானது 21ஆம் நூற்றாண்டின் நிர்ணயிக்கும் பங்காளியாக அமையும். இந்த பின்னணியில்தான் அமெரிக்க தீர்மானத்தை இந்தியா ஆதரித்தது.

 ஒரு வேளை அமெரிக்காவால் இது முன்வைக்கப்படாது இருந்திருந்தால் முடிவுகள் வேறுவிதமாக அமைந்திருக்கலாம். ஆனால் அமெரிக்காவின் தீர்மானத்தில் இந்தியா திருத்தங்களை செய்தது என்பதெல்லாம் மிகைப்படுத்தப்பட்ட பிரசாரங்களே ஆகும். திருத்தம் செய்வதற்கு அது ஒன்றும் பாரதூரமான பிரேரணை அல்ல. என்கின்றார்  புதினப்பலகையின் அரசியல் ஆய்வாளரான யதீந்திரா “ஜெனீவா தீர்மானமும் அதன் அரசியலும்” என்ற தலைப்பிலான தனது ஆய்வில்,பொதுவாக தமிழ் சூழலில் காணப்படும் ஒரு பெரிய குறைபாடு எல்லாவற்றிலும் நுனிப் புல் மேய்வது. பின்னர் அதனை ஒரு கண்டுபிடிப்பாக பறைசாற்றுவது. இத்தகைய பார்வைதான் இன்றுவரை நமது சூழலில் உலக ஒழுங்கு என்று ஒன்று இருப்பதையும் அது நமது விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்ட இயங்குநிலையைக் கொண்டது என்பதையும் நம்மால் விளங்கிக் கொள்ள முடியாமல் போனமைக்கான காரணமாகும், என்று குறிப்பிடும் ஆய்வாளர் யதீந்திரா, சமீப நாட்களாக இலங்கை அரசியல் சூழலில் ஒரு வகையான திகில் அனுபவத்தை வழங்கிக் கொண்டிருந்த ஜெனீவா அரசியல் ஒருவாறு முடிவுக்கு வந்துவிட்டது. தெற்கின் சிங்கள தேசியவாதக் தரப்பினரை கவலைக்குள்ளும் தமிழ் தேசியவாத சக்திகளை மகிழ்ச்சிக்குள்ளும் தள்ளும் வகையில் ஜெனீவாவின் முடிவு அமைந்திருக்கிறது. 47 நாடுகளை உறுப்பினராக கொண்டிருக்கும் ஐ.நா.வின் மனித உரிமைகள் பேரவையில் 24 நாடுகளின் ஆதரவைப் பெற்றதன் மூலம் இலங்கையின் மீதான அமெரிக்கப் பிரேரணை வெற்றிபெற்றுவிட்டது. இந்த பிரேரணையின் அரசியலை நாம் எவ்வாறு விளங்கிக் கொள்ளப் போகின்றோம். ஆனால் நம் மத்தியில் நடந்து கொண்டிருக்கும் சூடான விவாதங்களை பார்த்தால் இந்த பிரேரணையின் அரசியலை எவருமே விளங்கிக் கொண்டதாகத் தெரியவில்லை.
உண்மையில் இந்த பிரேரணை வருவதற்கும் அது வெற்றிபெறுவதற்கும் யார் காரணம்?
  1. இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் தொடர்ச்சியாக பேசிவரும் மனித உரிமை அமைப்புக்கள் இதற்கு தாமே காரணம் என்று வாதிடலாம்.
  2. புலம்பெயர் நாடுகளில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் இலங்கை அரசுக்கு எதிராக திரண்டு நின்று போராடிய தரப்பினர் அமெரிக்கா தமது அழுத்தங்களினால் தான் இத்தகையதொரு பிரேரணையைக் கொண்டு வந்தது என்று கூறலாம். அவ்வாறானவர்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் வெள்ளை மாளிகைக்கு முன்னால் திரண்டு அமெரிக்காவிற்கு நன்றியும் சொல்லியிருக்கின்றனர்.
  3. ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ வேறு விதமாக வாதிடலாம்.
இவைகள் அல்ல காரணம்.
நாம் தொடர்ந்தும் உறுதியுடன் இலங்கைக்குள் இருந்தவாறு அரசின் எதேச்சாதிகார போக்கிற்கு எதிராக போராடி வந்ததால்தான் இத்தகையதொரு நிலைமை உருவாகியது. நாங்கள் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகள் அனைத்துக்கும் அழுத்தங்களைக் கொடுத்ததால்தான் மேற்படி நாடுகளில் பலவும் இலங்கைக்கு எதிராக வாக்களித்தன.
இவை எல்லாவற்றுக்கும் அப்பால் சென்று விவாதிப்போரும் உண்டு.
  • அவ்வாறானவர்கள் தமிழக தேசியவாத சக்திகள் கொடுத்த அழுத்தத்திற்கு அடிபணிந்தே இந்தியா மேற்படி பிரேரணையை ஆதரித்தது. இதன் காரணமாகவே ஏனைய பல நாடுகளும் அமெரிக்காவின் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தன என்றும் சொல்லக் கூடும்.
  • செந்தமிழன் சீமானும் உறங்காப் புலி வை.கோபாலசாமியும் இல்லாவிட்டால் இது நடந்திருக்காது என்று வாதிடும் மேதைகளும் நம்மத்தியில் இல்லாமலில்லை. அவ்வாறு சிந்திப்பதற்கு த.தே.கூட்டமைப்பிலும் கூட ஓரிருவர் உண்டு.

No comments:

Post a Comment