Translate

Sunday 22 April 2012

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு இந்தியா மிகத் தீவிரமாக உள்ளது

ஊடகவியலாளர் மாநாட்டில் சுஷ்மா

இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதில் இந்தியா மிகத் தீவிரமாக உள்ளது. அதேநேரம் ஜெனிவாத் தீர்மானம் இலங்கைக்கு எதிரானது அல்ல.இவ்வாறு இந்திய நாடாளுமன்றத் தூதுக்குழுவின் தலைவர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார். இலங்கைக்கான ஆறுநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவரும், இந்திய மக்களவையின் எதிர்க் கட்சித் தலைவருமான சுஷ்மா சுவராஜ் தலைமையில் கொழும்பு தாஜ் சமுத்ரா நட்சத்திர விடுதியில் ஊடகவியலாளர் மாநாடு ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது.



இந்த ஊடக வியலாளர் மாநாட்டில், ஐ.நா மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் கடந்த கூட்டத் தொடரில் அமெரிக்காவின் அனுசரணையுடன் முன்வைக்கப்பட்ட இலங்கை மீதான தீர்மா னத்துக்கு இந்தியா ஆதரவு தெரிவித்தமைக்கு என்ன காரணமாக இருக்கும் என நீங்கள் கருதுகிறீர்கள் என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இது தொடர்பில் இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, ஐ.நா.மனித உரிமைகள் ஆணைக்குழு வின் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் இலங்கைக்கு எதிராக எதுவும் இல்லை. இத் தீர்மானமானது இலங்கை அர சாங்கத்தால் நியமிக்கப்பட்ட உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழு வின் பரிந்துரையை நடை முறைப்படுத்தும் படியே வலியுறுத்துகின்றது.

எனவே, உண்மைகளைக் கண்டறிவதற் கான நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை துரிதமாக நடைமுறைப் படுத்த வேண்டியது இலங்கை அரசாங்கத் தின் கடமையாகும். நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரை களை நடைமுறைப்படுத்துவதன் மூலம் போரினால் ஏற்பட்ட காயங்களை குணப் படுத்துவதற்கான சந்தர்ப்பம் இலங்கைக்கு கிடைக்கும். போர் காரணமாக இடம்பெயர்ந்த மக் களின் மீள்குடியேற்றத்தில் முன்னேற்றம் காணப்படுகின்ற போதிலும் இதுவரை மீள் குடியேற்றப்படாமல் இருக்கின்றவர்களை முழுமையாக அவர்களுடைய சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தும் வரை எமது விஜயத் தின் நோக்கம் நிறைவேறாது.

எமது இந்த விஜயத்தின் போது காணாமல் போனோர், கடத்தப்பட்டோர், உயர்பாது காப்பு வலயங்களை குறைப்பது, படைத்தரப் பினரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள தனியார் காணிகளை மீளளிப்பது மற்றும் வடக்கில் பொதுமக்கள் தொடர்பான விடயங்களில் இராணுவத்தலையீடுகள் குறைக்கப்பட வேண்டி யது குறித்தும் சுட்டிக்காட்டியுள்ளோம். 13ஆவது திருத்தச்சட்டத்திற்கு அப்பால் சென்று இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்ப தன் அவசியம் குறித்தும் இலங்கை அரசாங்கத்தை வலியு றுத்தியுள்ளோம். அரசாங்கமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இயன்றவரை விரைவாக பேச்சு வார்த்தையை ஆரம்பிக்க வேண்டும்.

இலங்கைக்கான எமது விஜயத்தின் போது வடக்கின் தற்போதைய நிலைமைகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் கருத் துக்கள் மற்றும் வடக்குக் கிழக்கு மக்களைச் சந்தித்து அவர்களின் குறைகளையும் அறிந்து கொள்ளும் வாய்ப்பு எமது குழுவுக்கு கிடைத் துள்ளது. போருக்கு பின்னரான இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் குறித்து ஆராய்வதே இந்திய அனைத்துக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் முக்கிய நோக்கம் என சுஷ்மா சுவராஜ் மேலும் தெரிவித்துள்ளார். அதேவேளை, மூன்று வருடங்களுக்கு முன்னர் தான் இலங்கை வந்தபோது வட பகுதி மக்களிடையே தங்கள் எதிர் காலம் குறித்து அச்ச உணர்வுகாணப்பட்டது. ஆனால் இப்போது அவர்கள் ஓரளவு சுதந்திரத்தை உணர்கின்ற போதிலும், இராணுவப்பிரசன் னம்குறைக் கப்படவேண்டும் என அவர்கள் விரும்புவதை உணரமுடிந்தது என இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் தமிழகத்தைச் சேர்ந்த இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் சுதர் சன நாச்சியப்பன் கூறியுள்ளார்.

2009ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜ யம் செய்த இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு வடபகுதிக்கு சென்ற போது அவதானித்த விடயங்களுக்கும், இப்போது அவதா னித்த விடயங்களுக்கு மிடையில் உள்ள வித்தியாசம் என்னவென்று ஊடகவியலாளர் ஒருவர் கேட்டபோதே அவர் இவ்வாறு குறிப் பிட்டுள்ளார். அத்துடன், இலங்கைத் தமிழ் மக்களுக்கு இந்தியா எப்போதும் ஆதரவளிப்பதுடன் உதவிகளை வழங்க வும் தயாராகவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

வட பகுதி கடற்பரப் பில் அத்து மீறி பிரவேசிக்கும் இந்திய மீனவர் பிரச்சினை குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த சுதர்சன நாச்சியப்பன், இப்பிரச் சினை தொடர்பில் இரு நாடுகளின் அரசாங்கங்களின் ஆதரவுடன் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து முன்னெடுத் துச் செல்லப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment