Translate

Sunday 22 April 2012

இராணுவப் பிரசன்னம் குறித்து வடக்கு மக்கள் கடும் அதிருப்தி; சுதர்சன நாச்சியப்பன் கருத்து


இராணுவப் பிரசன்னம் குறித்து வடக்கு மக்கள் கடும் அதிருப்தி; சுதர்சன நாச்சியப்பன் கருத்து
news
 மூன்று வருடங்களுக்கு முன்னர் இலங்கை வந்த போது வவுனியா இடம் பெயர்ந்தோர் முகாம்களில் மூன்று லட்சம் பேர் இருந்தனர். இப்போது 6000 பேர் மாத்திரமே உள்ளனர். அப்போது வடபகுதி மக்களிடையே தங்கள் எதிர்காலம் குறித்து அச்ச உணர்வு காணப்பட்டது.


 
இப்போது அவர்கள் ஓரளவு சுதந்திர மாக உணர்கிறார்கள். எனினும் இராணுவப் பிரசன்னம் குறைக்கப்பட வேண்டும் என்று அவர்கள் விரும்பு வதை உணர முடிந்தது. அது குறித்து அவர்கள் கடும் அதிருப்தி தெரிவித்தனர் என இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன் கூறினார்.
 
இலங்கைக்கு வந்துள்ள இந்திய நாடாளுமன்றத் தூதுக்குழுவினர் கொழும்பில் நேற்றுக் காலை செய்தியாளர்களை சந்தித்தபோதே அவர் இவ்வாறு கூறினார்.
இலங்கைத் தமிழ் மக்களுக்கு இந்தியா எப்போதும் ஆதரவளிப்பதுடன் உதவிகளை வழங்கவும் தயாராகவுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
 
பாக்கு நீரிணை மீனவர் பிரச்சினை குறித்த கேள்வி யொன்றுக்குப் பதிலளித்த அவர், இந்த விடயத்தில் இரு நாடுகளின் மீனவர்களும் கலந்துரையாடித் தீர்வு காண வேண்டும் என்றார்.
 
இதற்கு முன்னரும் அவ்வாறான பேச்சுக்கள் நடை பெற்றுள்ளன. இரு நாடுகளின் அரசுளின் ஆதரவுடன் இந்தப் பேச்சுக்கள் தொடர்ந்து முன்னெடுத்து செல்லப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment