Translate

Monday 23 April 2012

இலங்கை அரசு இன்றுவரை அதை நிறைவேற்றும் எண்ணம்கூட தனக்கு இல்லை.............


இலங்கையில் தமிழர்களுக்கு அவர்களுடைய பாரம்பரியமான நிலப்பகுதிகளை இணைத்து வடக்கு, கிழக்கு மாகாணங்களை உருவாக்குவதும் இந்தியாவில் உள்ளதைப் போல அந்த மாகாணங்களுக்கு உரிய அதிகாரங்களை வழங்குவதும் சாத்தியம்தானா என்று இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வினவுகிறார்.
இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இலங்கைக்குச் சென்றபோது அவரிடம் இந்தக் கருத்தை வலியுறுத்தியது. அதற்குப் பதில் அளிக்கும் வகையில் ராஜபக்ச இக் கருத்தை வெளியிட்டதாக "தி ஐலண்ட்' என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
1987-ல் ராஜீவ் காந்தி, ஜெயவர்த்தன இடையிலான ஒப்பந்த அடிப்படையில் இலங்கை அரசியல் சட்டத்துக்கு இந்த 13-வது திருத்தம் கொண்டுவரப்பட்டது.
இலங்கை அரசு இன்றுவரை அதை நிறைவேற்றும் எண்ணம்கூட தனக்கு இல்லை என்பதைத் தெளிவாக்கிவிட்டது.
அதையொட்டியே ராஜபக்சவும் அதை இகழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.  இந்த ஒப்பந்தமே இலங்கை அரசு மீது இந்திய அரசால் திணிக்கப்பட்டது என்றும் அவர் கூறியிருக்கிறார்.
13 வது அரசியல் சட்டத் திருத்தத்தை தங்கள் நாட்டு மீது இந்தியா திணிக்க முயற்சிப்பதாக இந்தியா மீது இலங்கை  ஜனாதிபதி ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார்.
இந்திய எம்.பி.க்கள் குழு இலங்கை வந்து சென்ற நிலையில் இலங்கை தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு சாத்தியமில்லை என்றும் 13 வது அரசியல் சட்டத் திருத்தத்தை தங்கள் நாட்டு மீது இந்தியா திணிக்க முயற்சிப்பதாகவும் ராஜபக்ச குற்றம் சாட்டியுள்ளார்.
இலங்கைத் தமிழர்களின் அரசியல் அமைப்பான தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் பேசுமாறு சுஷ்மா சுவராஜ் கூறியபோது, அவர்களை மட்டுமே தமிழர்களின் பிரதிநிதியாகத் தங்களால் கருத முடியாது என்று பதில் அளித்திருக்கிறார்.
அப்படியானால் வேறு யாரை அரசு அப்படிக் கருதுகிறது என்று தெரியவில்லை.
இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதியிலிருந்து இராணுவத்தை விலக்கிக் கொள்வது சாத்தியம் இல்லை என்றும் அவர் இந்திய எம்.பி.க்கள் குழுவிடம் தெரிவித்துவிட்டதாக "தி ஐலண்ட்' கூறுகிறது.
தமிழர்களின் வாழ்விடங்களிலிருந்து இராணுவத்தைத் திரும்பப் பெறுமாறு கோரியதையும் ராஜபக்ச ஏற்கவில்லை. பொதுமக்களின் வாழ்க்கைக்கு இடையூறாக இராணுவத்தினர் இருக்கமாட்டார்கள் என்று மட்டும் கூறியிருக்கிறார்.
இந்திய நாடாளுமன்றக் குழுவின் கோரிக்கைகள் எதையும் ஏற்க முடியாது என்பதையே இலங்கை  ஜனாதிபதி தனது சொல்லாலும் செயலாலும் உணர்த்தியிருக்கிறார் என்பதே உண்மை என்பதை "தி ஐலண்ட்' சுட்டிக்காட்டுகிறது.
இதற்கிடையே இலங்கை சென்று திரும்பிய இந்திய எம்.பி.க்கள் குழுவின் அறிக்கை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது.

No comments:

Post a Comment