Translate

Tuesday, 3 April 2012

மனித உரிமை தொடர்பான குற்றச்சாட்டுக்களை இலங்கை புரிந்து கொள்ள வேண்டும் - பரசுராமண்


மனித உரிமை தொடர்பான குற்றச்சாட்டுக்களை இலங்கை புரிந்து கொள்ள வேண்டும் - பரசுராமண்

மனித உரிமை தொடர்பான குற்றச்சாட்டுக்களை இலங்கை புரிந்து கொள்ள வேண்டும் - பரசுராமண்

மனித உரிமை தொடர்பான குற்றச்சாட்டுக்களை இலங்கை புரிந்து கொள்ள வேண்டுமென யுனேஸ்கோ அமைப்பின் இலங்கை, இந்திய, மாலைதீவு, பூட்டான் பிரதிநிதி ஆறுமுகம் பரசுராமண் தெரிவித்துள்ளார்.
மனித உரிமை மீறல் தொடர்பான விவகாரங்களில் உரிய கவனம் செலுத்தாது நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்த வேண்டுமாயின் இலங்கை சுயமாகவே நிலைமைகளை புரிந்து கொண்டு அதற்கான தீர்வுகளை முன்வைக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
நிபந்தனைகளை உரிய முறையில் புரிந்து கொண்டு செயற்படத் தவறினால் ஐக்கிய நாடுகள் அமைப்பு இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், இது உறுப்பு நாடுகளின் அரசியல் நிலைமைகளை அடிப்படையிலேயே நிர்ணயிக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் சில புனர்நிர்மானப் பணிகளில் பங்கேற்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாண பொது நூலக புனர் நிர்மானம் உள்ளிட்ட சில திட்டங்களை முன்னெடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
யுனேஸ்கோவினால் ஆரம்பிக்கப்பட்ட திட்டங்களை தாம் மேற்பார்வை செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான சந்தர்ப்பங்களின் போது தாம் இலங்கையில் நெருக்கடிகளை எதிர்நோக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment