Translate

Sunday, 22 April 2012

இலங்கைத் தமிழர்களை ஆதிவாசிகளைப் போல் பார்த்த இந்திய எம்.பி.க்கள் குழு!


FILE
இலங்கைத் தமிழர்களின் துயரங்களைப் பார்வையிடச் சென்றதாகக் கூறிக்கொண்ட இந்திய எம்.பி.க்கள் குழுவினர் தமிழ் மக்களை ஏதோ ஆதிவாசிகளைப் போல் பார்த்ததாக இலங்கையின் நவசம சமாஜக் கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணரத்ன சாடியுள்ளார்.

தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை வழங்கவேண்டும் என்ற விடயத்தை ஆணித் தரமாக வலியுறுத்தாமல் எம்.பி.க்கள் குழு உல்லாசப் பயணம் மேற்கொண்டதாகவும் கருணரத்ன கடும் தாக்குதலை முன் வைத்ததாக இலங்கை இணையதளச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்திய, இலங்கை உடன்படிக்கை 1987 இல் கையெழுத்திட்டு அதன் மூலமே 13 ஆவது திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

ஆனால் இதுவரையில் தமிழ் மக்களுக்கு அதிகாரப் பரவலாக்களையோ அரசியல் தீர்வையோ வழங்கவில்லை. 

அதேபோன்று யுத்தம் முடிந்து 3 வருடங்கள் கழிந்தும் மக்கள் தமது சொந்த இடங்களில் இதுவரையில் குடியேற்றப்படவில்லை.

அதிகாரப் பரவலாக்கலை வழங்க வேண்டும். மக்களை சொந்த இடங்களில் வாழ வைக்க வேண்டும். உணவு, நிவாரணங்களை வழங்க வேண்டுமென இந்தியக் குழுவினர் ஆணித்தரமாக இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தத்தைப் பிரயோகித்திருக்க வேண்டும். 

இதனை செய்யாமல் அதிகாரத்தைப் பரவலாக்க வேண்டும். மக்களை மீள்குடியேற்றவேண்டுமென கோரிக்கைகளையே முன்வைத்துள்ளது. 

இலங்கை அரசாங்கமும் இதற்கு தலையை ஆட்டிவிட்டு எதிர்காலத்தில் எதனையும் செய்யப் போவதில்லை. 

வழக்கம்போல் தமிழ் மக்களை ஏமாற்றும் இந்தியாவின் நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது. 

ஆதிவாசிகளை பார்வையிடுவதற்காக சுற்றுலாப் பயணிகள் வருவது போன்று தமிழ் மக்களைப் பார்வையிடுவதற்கான சுற்றுலாப் பயணமே இந்தியக் குழுவின் விஜயமாகுமென்றும் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன சாடியுள்ளார்.

No comments:

Post a Comment