Translate

Sunday 22 April 2012

அரசு மஹிந்தசிந்தனையை மீறிச் செயற்படின் தீர்க்கமான முடிவு _


  அரசாங்கம் மஹிந்த சிந்தனையை மீறி செயற்பாடுகளை முன்னெடுக்குமானால் அச்சந்தர்ப்பத்தில் பங்காளி கட்சியான ஜாதிக ஹெல உறுமய தீர்க்கமான தீர்மானமொன்றை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுமென இக் கட்சியின் செயலாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். 


இலங்கையில் தமிழீழத்திற்காக குரல் கொடுப்பதை விடுத்து காஷ்மீர் தனிநாட்டுக்காக கருணாநிதி குரல் கொடுக்க வேண்டுமென்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க மேலும் கருத்து தெரிவிக்கையில் ;

இலங்கை தொடர்பாக இந்தியாவோ அல்லது வேறு எவரும் பல்வேறுபட்ட யோசனைகளை முன்வைத்தாலும் ஜனாதிபதியோ, அரசாங்கமோ மஹிந்ந சிந்தனைக்கு அப்பால் சென்று செயற்பாடுகளை முன்னெடுக்குமானால் அரசாங்கத்தின் பங்காளி கட்சியான ஜாதிக ஹெல உறுமய தீர்க்கமான தீர்மானமொன்றை மேற்கொள்ள வேண்டிய நிலைமை உருவாகும்.

மாகாண சபைக்கு காணி, பொலிஸ் உரிமைகளை வழங்குவதை கடுமையாக எதிர்க்கின்றோம். இதற்கு ஒரு போதும் இடமளிக்க மாட்டோம்.

தமிழீழம்

இந்தியாவில் தமிழ் நாடு தனி நாடாக பிரிய வேண்டும் தமிழ் பேசும் மக்கள் அங்கு வாழ வேண்டுமென போராட்டம் நடத்திய மு. கருணாநிதி அதற்காக முதலில் தமிழ் நாட்டில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்த வேண்டும்.

அத்தோடு இலங்கையில் தமிழீழத்திற்காக சர்வஜன வாக்கெடுப்பை நடத்த முன்பு 1948 ஆம் ஆண்டு ஐ.நா.வில் நிறை வேற்றப்பட்ட தீர்மானத்தின்படி காஷ்மீரிலும் சர்வஜன வாக்கெடுப்பை நடத்துமாறு புதுடில்லி மத்திய அரசாங்கத்தை கருணாநிதி கோர வேண்டும் என்றும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். __

No comments:

Post a Comment