Translate

Monday 23 April 2012

லண்டனில் நடைபெற்ற சரித்திர நாயகர்கள், நாட்டுப்பற்றாளர்கள் நினைவு நிகழ்வு!photo in


2009 ஆம் ஆண்டு ஆனந்தபுரம் சமர்க்களத்தில் வீரகாவியமாகிய  நூற்றுக்கணக்கான மாவீரர்கள் உட்பட இம்மாத காலங்களில் வீரகாவியமாகிய  மாவீரர்களையும், மற்றும் தமிழீழ நாட்டுப்பற்றாளர்கள் அனைவரையும்  நினைவுகொள்ளூம் நினைவு வணக்க நிகழ்வு லண்டனில் நடைபெற்றது.

“Alperton Community School” மண்டபத்தில் நேற்று 22.04.2012 ஞாயிற்றுக்கிழமை நடந்த  இந் நிகழ்வில் பொதுச்சுடரினை கவுன்சிலர் திரு.கணா அவர்கள் ஏற்றி வைக்க  அகவணக்கத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.

தொடர்ந்து பிரிகேடியர் சசிக்குமார் மாஸ்டர், பிரிகேடியர் சொர்ண்ணம், பிரிகேடியர்  பால்ராஜ், ஆகியோரின் திருவுருவப் படங்களுக்களுக்கு பிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரர் அவர்களின் தாயார் அவர்கள் ஈகைச்சுடர் ஏற்றி மலர்மாலையினை  அணிவித்தார்.

அதைத் தொடர்ந்து பிரிகேடியர் தீபன், பிரிகேடியர் தமிழேந்தி, பிரிகேடியர்  மணிவண்ணன், ஆகியோரின் திருவுருவப் படங்களுக்களுக்கு திரு. சுரேஸ் அவர்கள்  ஈகைச்சுடர் ஏற்றி மலர்மாலையினை அணிவித்தார்.

அடுத்து பிரிகேடியர் விதுசா, பிரிகேடியர் துர்க்கா, ஆகியோரின் திருவுருவப்  படங்களுக்களுக்கு திருமதி. ஜெயா அவர்கள் ஈகைச்சுடர் ஏற்றி மலர்மாலையினை  அணிவிக்க, கேணல் ரமணன், கேணல் இளங்கீரன் ஆகியோரின் திருவுருவப்  படங்களுக்களுக்கு முன்னாள் போராளியான திரு. குமார் அவர்கள் ஈகைச்சுடர்  ஏற்றி மலர்மாலையினை அணிவித்தார்.

மண்மீதும், மொழிமீதும் பற்றுக்கொண்டு அதற்காகவே பணிசெய்து உயிர் நீத்த  நாட்டுப்பற்றாளர்கள், மற்ரும் மாமனிதர்களுக்கான திருவுருவப் படத்திற்கு  ஆகியோரின் திருவுருவப் படங்களுக்களுக்கு பாஸ்கரி விஜயதாஸ்  அவர்கள்  ஈகைச்சுடர் ஏற்றி மலர்மாலையினை அணிவிக்க இம்மாத காலப்பகுதிகளில்  வீரகாவியமான அனைத்து மாவீரர்களுக்குமான நினைவுத் தூபிக்கு ஈகச்சுடரினை ஏற்றி  மலர்வணக்கத்தினை பிரித்தானியத் தமிழ்த் தேசிய நினைவேந்தல் அக்வத்தின் தலைவி திருமதி. இரத்தினேஸ்வரி அவர்கள் ஆரம்பித்துவைத்தார்.

மலர் வணக்கத்தின்ஐத் தொடர்ந்து எழுச்சி நிகழ்வுகளும், நினைவுரைகளும்  இடம்பெற்றன. இந் நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட பிரித்தானியா வாழ் தமிழ்  மக்க உணர்வுபூர்வமாக வந்து கலந்துகொண்டிருந்தனர்.

தியாகச் சுடர் அன்னை பூபதி தொடர்பான நினைவுரையினை லண்டனில் உள்ள ஈழத் தமிழ் மாதர்  சங்கத்தைச் சேர்ந்த திருமதி. ரூபசெளந்தரி கணேசபாக்கியம் அவர்கள்  வழங்கினார். தொடர்ந்து கவுன்சிலர் திரு. கணா, மற்ரும் கோபித் ஆகியோர்  நினைவுரைகளை ஆற்றினர்.

எழுச்சிக் கவிதைகளை செல்வி. விசாலி விஜயதாஸ், மற்றும் செல்வன். மருதீசன் ஆகியோர் வழங்கியிருந்தனர்.

எழுச்சி கானங்களை முல்லை நிசாந்தன், ரூபன், செல்வி. ஜனா ஆகியோர் வழங்கியிருந்தனர். இறுதியாக உறுதியேற்போடு நிகழ்வுகள் யாவும் இரவு 9:15 மணிக்கு  நிறைவுபெற்றது

No comments:

Post a Comment