Translate

Tuesday, 12 June 2012

சிறீலங்காவின் முன்னேற்றம் பற்றிப்பேசும் பான் கி-மூனிற்கு போர்க்குற்றம் பற்றி ஆராய நேரம் இல்லை.


சிறீலங்காவின் முன்னேற்றம் பற்றிப்பேசும் பான் கி-மூனிற்கு போர்க்குற்றம் பற்றி ஆராய நேரம் இல்லை.

சிறுவர்கள் பற்றிய கறுப்புப் பட்டியலில் இருந்து சிறீலங்காவை அகற்றியுள்ள ஐக்கிய நாடுகள் சபை, சிறுவர்களுக்கான புனர்வாழ்வு நடவடிக்கைகளில் அந்த நாடு முன்னேறி வருவதாகத் தெரிவித்துள்ளது.
சிறுவர்களும், ஆயுத மோதலும் என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்த அறிக்கையில், இலங்கையில் சிறுவர்களுக்கான கல்வி, சுகாதாரம், மற்றும் காணாமல்போன சிறுவர்களைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கை என்பவற்றில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும், போரில் ஈடுபட இணைக்கப்பட்டிருந்த 1400 சிறுவர்கள் இதவரை எங்கு எனத் தெரியவில்லை எனவும், இவர்களைத் தேடிக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் இந்த அறிக்கை கூறுகின்றது.
இருப்பினும், இந்தச் சிறுவர்களைத் தேடிக்கண்டுபிடிக்க சிறீலங்கா அரசாங்கம் மிகுந்த பிரயத்தனம் மேற்கொண்டது என, ஐக்கிய நாடுகள் செயலர் நாயகம் பான் கி-மூன் புகழாராம் சூட்டியிருக்கின்றார். இதனாலேயே சிறீலங்காவை கறுப்புப் பட்டியலில் இருந்து நீக்கியிருப்பதாகவும் அவர் நியாயம் கற்பித்திருக்கின்றார்.
இதேவேளை, தமிழர் தாயகப் பகுதிகளில் சிறீலங்கா படையினர் ஆக்கிரமித்து நிலைகொண்டுள்ள சிறுவர்களுக்கான பாடசாலைகள் பற்றித் தெரிவித்த பான் கி-மூன், குறிப்பிட்டளவு பாடசாலைகளில் இருந்து படையினர் வெளியேறியுள்ள போதிலும், 15 பாடசாலைகளில் தொடர்ந்தும் தங்கிருப்பதை ஒப்புக்கொண்டுள்ளார்.
ஆனால் ‘ஈழம் டெய்லியின்’ தாயகச் செய்தியாளர்களின் தகவல்களின் அடிப்படையில், படையினர் ஆக்கிரமித்துத் தங்கியுள்ள பாடசாலைகள் மட்டுமன்றி, சிறுவர்களை உள்ளடக்கிய குடும்பங்களின் சொத்துக்கள் இதனைவிட அதிகம் என்பதுடன், இது தொடர்பில் ஐ.நா முறையான கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினர்.
இவை மட்டுமன்றி, உயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் பல ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் காணிகளையும், சொத்துக்களையும் மீளக் கையளிக்க மறுத்துவரும் படையினர், மேலும் பல காணிகளை அபகரிக்கும் தொடர் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றமை அண்மைய செய்திகளாக வெளிவந்துள்ளன.
இலங்கைத்தீவில் சிறுவர்கள் போரில் ஈடுபட்டனர் என மீண்டும், மீண்டும் வாய்கிழியப் பேசும் சிறீலங்கா அரசாங்கமும், ஐக்கிய நாடுகள் சபையும் அந்தச் சிறுவர்கள் ஏன் போரில் ஈடுபட்டனர், அவர்களை போரை நோக்கி ஈழுத்த காரணம் என்ன? அவர்களின் பெற்றோரையும், சகோதரர்களையும் படுகொலை செய்தது யார்? அவர்களின் பெண் சகோதரிகளை பாலியல் வல்லுறவு புரிந்தது யார்? போன்ற பல கேள்விகளுக்குப் பதில் என்ன எனத் தெரிந்தும், தெரியாததுபோல் நடித்து வருகின்றன.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் முன்னர் ஒரு காலத்தில் சிறுவர்கள் இணைக்கப்பட்டிருந்த போதிலும், பிற்காலத்தில் சிறீலங்கா அரசாங்க படைகளின் வன்முறையில் பாதிக்கப்பட்டு, பெற்றோரை இழந்து ஆதரவற்று இவ்வாறு இணைந்த சிறுவர்கள், கல்வி கற்க அனுமதிக்கப்பட்டு, மிகவும் பாதுகாப்பாக அனைத்து வசதிகளுடனும் வளர்க்கப்பட்டனர் என்பது உலகறிந்த உண்மை.
2002ஆம் ஆண்டு சமாதான ஒப்பந்தம் இடம்பெற்ற பின்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின்போது, ஊடகங்களுக்கு வெளியிடப்படாது மேற்குலக நாடுகளிடம் கையளிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் பல முக்கிய ஆவணங்களை ‘தமிழ்நெட்.கொம்’ இணையம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியிட்டிருந்தது.
இதில் சிறுவர்களைப் பாதுகாக்கவும், வளர்க்கவும், கல்வி கற்பிக்கவும் தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட நடவடிக்கைகள், மற்றும் ஏற்கவே படையில் இணைந்திருந்து, வயதெல்லை காரணமாக விடுதலை செய்யப்பட்ட, மற்றும் வேறு பிரிவுகளுக்கு மாற்றப்பட்ட சிறுவர்கள் பற்றிய விபரங்கள் அனைத்தும் இணைக்கப்பட்டிருந்தன.
அண்மையில் வெளியிடப்பட்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர்கள் தொடர்பான கறுப்புப் பட்டியலில் தற்பொழுது மேற்குலகின் கண்டனத்திற்கு உட்பட்டு, அடிபணிய மறுக்கும் சிரியா, யெமென், சூடான் உட்பட 52 நாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
ஆனால் சிறீலங்கா, மற்றும் நேபாளம் ஆகிய நாடுகள் இந்தப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் விவகாரம் தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள ராதிகா குமாரசாமியின் சிபாரிசிலேயே சிறீலங்கா கறுப்புப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதுடன், ராதிகா மகிந்த அரசாங்கத்திற்கு மிகவும் நெருங்கியவர் .

No comments:

Post a Comment