Translate

Monday, 18 June 2012

நில அபகரிப்புக்கு எதிரான மக்களின் குரலை ஒடுக்க ஈ.பி.டி.பி ஒட்டுக் குழு!


தமிழர் தாயகத்திலுள்ள ஒட்டுக்குழுவான ஈ.பி.டி.பி சிங்கள இனவெறியர்களின் காணிச் சுவீகரிப்புகளுக்கு உடந்தையாகச் செயற்படுகிறது என்று கிளிநொச்சி மக்கள் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.கிளிநொச்சியிலுள்ள பல ஏக்கர் கணக்கான காணிகளை சிறிலங்காப் படையினர் சுவீகரித்து வருகின்ற நிலையில் இதற்கு எதிராக மக்களின் எதிர்ப்புகளும் அதிகரித்து வருகின்றன.
நில அபகரிப்புக்களை மக்கள் எதிர்க்க மாட்டார்கள் என்றும் பேசா மடந்தையர்களாக பார்த்துக்கொண்டிருப்பார்கள் என்று எதிர்பார்த்த சிங்கள அரசுக்கும் இராணுவத்திற்கும் தமிழ் மக்களின் எதிர்ப்புச் செயற்பாடுகள் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளன.
நில அபகரிப்புகளுக்கு எதிராக மக்களின் குரல்கள் உரக்க ஒலிப்பதால் இவ் விடயத்தில் சர்வதேச சமூகத்தின் பார்வையும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் மக்களைச் சமாளித்து பேசாமல் இருக்கச் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரச உயர் மட்டம் ஈ.பி.டி.பி ஒட்டுக் குழுவைப் பணித்துள்ளதாக நம்பகமான வட்டாரங்களிலிருந்து தகவல்கள் கசிந்துள்ளன.
கிளிநொச்சியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் ஒட்டுக்குழு நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் செயற்பட்ட விதம் இதனைத் தெட்டத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது. கிளிநொச்சியிலுள்ள தனியார் காணிகள் எச்சந்தர்ப்பத்திலும் எத்தேவைக்காகவும் சட்டரீதியாக எவருக்கும் வழங்கப்படமாட்டாது என்று சந்திரகுமார் இங்கு கூறியிருந்தார்.
மேலும், மக்களுடைய காணிகள் எப்பொழுதும் அந்த மக்களுக்குதான் அவை எச்சந்தர்ப்பத்திலும் சுவீகரிக்கவோ அல்லது வேறு தேவைகளுக்காக வழங்கப்படவோ மாட்டாது பாதுகாப்பு அமைச்சும் இதே நிலைப்பாட்டில் தான் உள்ளது.
இராணுவத்தின் பயன்பாட்டில் உள்ள தனியார் காணிகள் படிப்படியாக அவர்களிடமிருந்து பெறப்பட்டு உரியவர்களிடம் கையளிக்கப்படும் பல தனியார் காணிகள் அவ்வாறு பெறப்பட்டு மீண்டும் அந்த மக்களுக்கே கையளிக்கப்பட்டுள்ளது.
அதில் சில காலதாமதங்கள் இருப்பினும் அந்தந்த காணிகள் அந்த மக்களுக்கே என்பதில் எந்த மாற்றமும் இல்லை. கிளிநொச்சியில் எதிர்காலத்தில் காணிகள் விநியோகிக்கப்படும் போது இந்த மாவட்டத்தினதும் மக்களினதும் நலன் கருதி நன்கு திட்டமிடப்பட்டே வழங்கப்படும்.
மேலும், குளங்கள் மற்றும் ஆற்றுப்பகுதிகளில் ஒதுக்கப்பட்ட நிலங்களிலும் அரச திணைக்களங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிலங்களிலும் நீண்ட காலமாக குடியிருப்போர் தொடர்பில் குடியிருப்பாளர்கள் பாதிக்கப்படாத வகையிலும் சட்டத்தை மீறாத வகையிலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஒட்டுக்குழு உறுப்பினர் சந்திரகுமார் கூறிய போது அது தங்களுக்கு நகைப்புக்கிடமாக இருந்ததாக இக்கூட்டத்தில் கலந்து கொண்ட மக்களில் பலர் தெரிவித்தனர்.
‘ஆமிக்காரன் எங்கட காணியெல்லாத்தையும் பிடிக்கிறான். ஆதில காம்புகளும் அடிக்கிறான். இப்பிடியிருக்க இந்த விசரன் என்னென்டா ஆமி திரும்ப நிலத்தை தருவனாம் எண்டுறான். இப்பிடி கதைக்க இவனுக்கு வெக்கமா இல்லையா’ என்று மேற்படி கூட்டத்தில் இருந்த முதியவர் ஒருவர் கூறியதாக அங்கிருந்த செய்தியாளர் தெரிவித்தார்.
தமிழர் தாயகத்திலுள்ள பல ஏக்கர் கணக்கான நிலங்கள் தினமும் சிங்கள பேரினவாதத்தால் சுவீகரிக்கப்பட்டு வருகின்ற நிலையில் இதற்கு எதிராக ஈ.பி.டி.பி இதுவரை எந்தக் கருத்தையும் முன்வைக்கவில்லை. இந்நிலையில் இந்த நில ஆக்கிரமிப்புக்கு எதிராக மக்களை கிளர்ந்தௌ முடியாமல் அடக்கி வைத்திருக்கும் செயற்பாட்டில் இந்த ஒட்டுக்குழு ஈடுபட்டுள்ளமை குறித்தும் தமிழ் மக்கள் கொதிப்படைந்துள்ளனர்.

No comments:

Post a Comment