தழிழர்களது வாழ்விடங்களை அபகரிக்கும் இலங்கை அரசின் திட்டமிட்ட செயற்பாடுகளைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் இன்றும் நாளையும் பாரிய ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டின் இன்று மதியம் ஒரு மணியளவில் யாழ். பஸ் நிலையத்திற்கு முன்பாக முதலாவது ஆர்ப்பாட்டம் நடாத்தப்படவுள்ளது.
இதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனநாயக மக்கள் முன்னணி என்பனவும் ஆதரவு தெரிவித்துள்ளதோடு இதில் இவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
அத்தோடு வலி.வடக்கு பிரதேச சபையின் முன்னால் நாளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இரண்டாவது ஆர்ப்பாட்டம் நடாத்தப்படவுள்ளது.
இதேவேளை, தமிழர்களது வாழ்விடங்களை அழிக்கும் செய்ற்பாட்டிற்கு எதிராக, தொடர்ச்சியாக போராட்டங்கள் நடாளாவிய ரீதியில் நடாத்தப்படும் என இப்பேராட்டங்களை ஒழுங்கு செய்த சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment