Translate

Thursday 5 July 2012

கனேடிய தலைவர்களின் வாழ்த்துடன் தமிழ் இளையோர் நடாத்தும் 'தாளம் 2012' நடனப் போட்டி


கனடியத் தமிழ் இளையோர் ஒன்றியத்தின் கலைப் பண்பாட்டுக் குழு பல்கலைக்கழக மற்றும் கல்லூரி தமிழ் மாணவர் அமைப்புகளுடன் இணைந்து நடாத்தும் இரண்டாவது 'தாளம்' நடனப் போட்டி ஞாயிறு, யூன் 24 ஆம் நாள் நடைபெறவுள்ளது. ரொறொன்ரோ நகரில் அமைந்துள்ள Metro Toronto Convention Centre இன் John Bassett Theatre இல் இடம்பெறவுள்ள இப்போட்டியில் மெக்மாஸ்டர் பல்கலைக்கழகம், ரொறன்ரோ பல்கலைக்கழகம், யோர்க் பல்கலைக்கழகம், ஒசாவா பல்கலைக்கழகம், ரயர்சன் பல்கலைக்கழகம், மற்றும் கொன்கோர்டியா பல்கலைக்கழகங்களை சேரந்த 240ற்கு அதிகமான மாணவர் கலந்து கொள்ளவுள்ளனர்.




நடனக் கலையில் ஈடுபட்டு வரும் இளையோரை ஊக்குவிக்கும் நோக்கோடும் நடனக் கலையில் அவர்கள் வைத்திருக்கும் ஆர்வத்தையும் அவர்களின் திறமைகளையும் வெளிகாட்டும் முகமாகவும் தாளம் நடனப் போட்டி சென்ற ஆண்டு முதன்முறையாக நடாத்தப்பட்டது.



ரொறன்ரோ நகரில் தமிழ்ச் சமூகத்திற்கென்றொரு ஒரு சமூக நிலையம் உருவாக்கும் முயற்சியில் கனடியத் தமிழ் இளையோர் ஒன்றியம் செயற்பட்டு வருகிறது. அத்திட்டத்திற்கு பணம் சேர்க்கும் முகமாக தாளம் நடனப் போட்டியில் வரும் வருமானம் முழுவதையும் இத்திட்டதிற்காக கனடியத் தமிழ் இளையோர் ஒன்றியம் ஒதுக்கி வருகின்றது. சென்ற ஆண்டு, தாளம் நடனப் போட்டி மூலம் கனடியத் தமிழ் இளையோர் ஒன்றியம் $10 000 பணத்தை சேர்த்தது. இவ்வாண்டும், தாளம் நடனப் போட்டியில் வரும் வருமானம் முழுவதும் ஒரு சமூக நிலையம் உருவாக்குவதற்காக ஒதுக்கி வைக்கப்படும்.

தாளம் நடனப் போட்டியில் கலந்து கொள்ளவிருக்கும் 6 அணிகளும் பல நாட்களாக கடுமையாக முயற்சித்து தங்கள் நடனங்களை பயின்று வருகின்றனர். அவர்களுக்கு உற்சாகம் அளிக்கும் முகமாகவும், தமிழ்ச் சமூகத்திற்கான ஒரு சமூக நிலையம் உருவாக்கும் முயற்சிக்கு உறுதுணையாகவும் பல நிறுவனங்கள் தாளம் நடனப் போட்டிக்கு அனுசரனை வழங்கியுள்ளனர்.



மேலும், பல பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் தாளம் நடனப் போட்டிக்கும் இப்போட்டியில் கலந்து கொள்ளும் இளையோருக்கும் தங்கள் ஆதரவை வழங்கியுள்ளனர். இவர்கள் இப்போட்டி வெற்றிகரமாக நடைபெற தங்கள் வாழ்த்துக்களையும் போட்டியில் கலந்து கொள்ளும் அணிகளுக்கு தங்கள் பாராட்டுகளையும் வாழ்த்து மடல்கள் ஊடாக தெரிவித்துள்ளார்கள். தாளம் நடனப் போட்டியையும் எமது இளையோரின் முயற்சியையும் அங்கீகரித்து அவர்கள் வழங்கிய வாழ்த்து மடல்களை பார்வயைிட:

Minister Hon. Jason Kenney

http://ctya.org/blog/thaalam-2012-best-wishes-from-hon-jason-kenney/



Ontario PC Leader Tim Hudak

http://ctya.org/blog/thaalam-2012-ontario-pc-leader-tim-hudak-the-experience-will-positively-shape-young-canadian-tamils/



Minister Hon. Kathleen Wynne

http://ctya.org/blog/thaalam-2012-best-of-luck-from-minister-kathleen-wynne/



Minister Hon. Glen Murray

http://ctya.org/blog/thaalam-2012-congratulations-from-minister-murray/



M.P. John McCallum,

http://ctya.org/blog/thaalam-2012-m-p-john-mccallum-i-would-also-like-to-commend-you-for-providing-an-opportunity-to-youths-to-express-them-selves-and-grow-as-individuals/



M.P. Hon. John McKay

http://ctya.org/blog/thaalam-2012-m-p-hon-john-mckay-the-importance-of-arts-and-culture-to-our-communities-cannot-be-overstated/



M.P. Dan Harris

http://ctya.org/blog/thaalam-2012-m-p-dan-harris-i-am-proud-to-support-the-canadian-tamil-youth-alliance-and-all-participants-at-the-2012-thaalam-inter-universitycollege-dance-competition/?product=Norton+Internet+Security&version=19.1.0.28&layout=OEM30&partner=HP+HPM+CN+P1G%2860%29&ispid&sitename&actstat=not+activated&substatus=expired&ncoap=1



M.P. Mike Sullivan

http://ctya.org/blog/thaalam-2012-break-a-leg-wishes-of-luck-from-m-p-mike-sullivan/



M.P.P. Frank Klees

http://ctya.org/blog/thaalam-2012-m-p-p-frank-klees-acknowledge-the-ongoing-work-of-the-canadian-tamil-youth-alliance-to-develop-and-strengthen-the-youth-of-the-tamil-community/



M.P.P. Peter Tabuns

http://ctya.org/blog/thaalam-2012-peter-tabuns/



M.P.P. Vic Dhillion

http://ctya.org/blog/thaalam-2012-m-p-p-vic-dhillion-performing-arts-completion-like-thaalam-is-an-effective-way-to-inform-our-youth-and-others-about-our-culture-and-heritage/



M.P.P. Greg Sorbara!

http://ctya.org/blog/thaalam-2012-warmest-greetings-from-m-p-p-greg-sorbara/



M.P.P. Dr. Helena Jaczek

http://ctya.org/blog/thaalam-2012-m-p-p-dr-helena-jaczek-this-event-brings-together-remarkable-young-people-from-around-our-community-and-across-the-province/



Mayor Hazel McCallion

http://ctya.org/blog/thaalam-2012-greetings-from-mayor-mccallion/



தாளம் நடனப் போட்டிக்கான நுழைவுச் சீட்டுகள் விற்பனைக்குள்ளன. உங்கள் நுழைவுச் சீட்டைப் பெற்றுக்கொள்ள கீழே உள்ள தொலைபேசி எண்களை அழைக்கவும்:

Brampton – (416) 732-6397
Mississauga – (647) 567-5777
North York – (416) 807-6213
Scarborough – (647) 787-2892
Toronto – (647) 864-4842
Vaughan – (416) 807-6213

No comments:

Post a Comment