மேலும் சில இணையத்தளங்கள் சில நாட்களில் மூடக்கப்படும்! கெஹெலிய.
அரசியல்வாதிகளையும், பல முக்கிய நபர்களையும் இலக்குவைத்து சேறுபூசும் பிரசாரங்களை முன்னெடுக்கும் இணையத்தளங்கள் அடுத்த சில நாட்களில் முடக்கப்படும் என ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
தகவல் திணைக்களத்தில் பதிவுசெய்யப்படாது, மிகவும் சூட்சுமமான முறையில் இயங்கிவரும் இந்த இணையத்தளங்களில் பெரும்பாலானவை வெளிநாடுகளிலிருந்தே நிர்வகிக்கப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்த இணையத்தளங்கள் நிர்வகிக்கப்படும் இடங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை என்றாலும், அவற்றை இலங்கையில் பார்வையிட முடியாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்த இணையத்தளங்களினால் முன்னெடுக்கப்படும் சேறுபூசும் பிரசாரங்கள் தொடர்பாக பல முறைப்பாடுகள் ஊடகத்துறை அமைச்சுக்கு கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இதன்போது தெரிவித்தார்.
No comments:
Post a Comment