இலங்கையின் போர்க் குற்றங்கள் பற்றிய ஆவணப்படத்தை வெடிகுண்டாக வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய பிரிட்டனின் சனல்-4 தொலைக்காட்சி, அடுத்த வெடிகுண்டு ஒன்றை போட்டுள்ளது. இந்த வெடிகுண்டு யாருடைய தலையில் வந்து வீழ்ந்தது? புதுடில்லியின் தலையில்!
ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற இராணுவக் குற்றங்கள் பற்றி அலசும் சனல்-4 ஆவணப்படம், இப்போது ஒளிபரப்பாகி டில்லியை அதிர வைத்திருக்கிறது. சனல்-4 இல் சுமார் 1 மணி நேரம் காண்பிக்கப்பட்ட இந்த ஆவணப்படத்தின் பெயர், 'Kashmir's torture trail'.
இந்திய இராணுவத்தால் காஷ்மீர் பகுதியில் நடத்தப்பட்ட போர்க்குற்றங்கள் பற்றிய காட்சிகள் இதில் உள்ளன. பிரிட்டிஷ் டி.வி. சனல் வெளியிட்ட டாக்குமென்ட்ரி ஒருபுறம் இருக்க, மறுபுறத்தில், மத்திய அரசை தாக்கும் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது, பிரிட்டிஷ் பத்திரிகை 'கார்டியன்'.
கடந்த வருட நடுப்பகுதியில், இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்கள் பற்றிய 'Sri Lanka's Killing Fields' ஆவணப்படம் வெளியானபோது, பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் அது தொடர்பான விவாதம் ஒன்று நடைபெற்றது.
பிரிட்டிஷ் எம்.பி.க்கள் சிலர், இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பாக விசாரணை வேண்டும் என்ற வாதத்தை முன்வைத்தார்கள். இப்போது, சனல்-4 தமது புதிய வெடிகுண்டை இந்திய மண்ணில் போட்டிருப்பதை அடுத்து, பிரிட்டனுடன் கடினமான இராஜதந்திர தொடர்பு ஒன்றை செய்ய வேண்டிய நிலை மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது.
ஐ.நா. வின் அடுத்த மனித உரிமை மாநாட்டில் இந்த விவகாரத்தை இலங்கை பெரிதுபடுத்த முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
http://www.seithy.co...&language=tamil

No comments:
Post a Comment