Translate

Tuesday, 17 July 2012

முன்னாள் போராளிகளுக்கு கட்டாயமாக்கப்படும் சிங்களமொழி


news
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளுக்கு சிங்கள மொழி கற்பித்து கொடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதன்படி, 698 முன்னாள் போராளிகளுக்கு தற்போது முகாம்களில் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வருவதாகவும்,
இவ்வாறு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வரும் முன்னாள் போராளிகளுக்கு  சிங்கள மொழிப் பயிற்சி வழங்கப்பட  உள்ளது.
 
சமூக ஒருமைப்பாட்டு மற்றும் தேசிய மொழிகள் அமைச்சினால் முன்னாள் போராளிகளுக்கு சிங்கள மொழியை 
புகட்டும் திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது. முகாம்களில் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வரும் சில முன்னாள் 
போராளிகளுக்கு ஏற்கனவே சிங்கள மொழிப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
 
மேலும் இலங்கையில் அரசாங்கம் சிங்களமொழியை கட்டாயமாக்க முயற்சித்துவருவதாக பலதரப்பினராலும் 
குற்றஞ்சாட்டப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment