Translate

Tuesday, 17 July 2012

புகலிடக் கோரிக்கை மறுக்கப்பட்டு ஒஸ்ரேலியா அரசாங்கத்தால் நாடுகடத்தப்பட இருக்கும் தமிழ் இளைஞன்


புகலிடக் கோரிக்கை மறுக்கப்பட்டு ஒஸ்ரேலியா அரசாங்கத்தால் நாடுகடத்தப்பட இருக்கும் தமிழ் இளைஞன்

சிங்களப் பயங்கரவாத அரசாங்கத்தின் அச்சுறுத்தலால் சிறிலங்காவில் வாழ வழியற்று ஒஸ்ரேலியா நாட்டில் அகதி அந்தஸ்துக் கோரி இருந்த தமிழ் இளைஞனின் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு  சிறிலங்காவுக்கு நாடுகடத்தப்பட இருக்கின்றார்.  

சமூக தடுப்புக்காவலில் விடப்பட்டிருந்து மேற்படி இளைஞனை  இன்று மாலை சந்தித்த ஒஸ்ரேலியா குடிவரவு குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகள் நாடுகடத்துவதற்கான அறிவித்தல் கடிதத்தைக் கையளித்ததுடன், அவரை மெல்பேர்ண் தடுப்புமுகாமுக்கு அழைத்துச் சென்றனர். இவ் இளைஞர் எந்நேரமும்  நாடுகடத்தப்படாலாமென அஞ்சப்படுகின்றது.


ஒஸ்ரேலியா  அரசாங்கத்தின் இத்தகைய மனிதாபிமானமற்ற செயலைக் கண்டித்துள்ள Australian Tamil Refugee Council.  அண்மையில் வேறு  நாடுகளிலிருந்து நாடுகடத்தப்பட்ட சில தமிழ் இளைஞர்கள் படுகொலைசெய்யப்பட்டதை கருத்தி்ற்கொண்டு, சிறிலங்காவில் தமிழர்களின் உயிருக்கு உத்தரவாதமற்றநிலையில்  தமிழ் அகதியின் நாடுகடத்தலை நிறுத்தவேண்டும் என ஒஸ்ரேலியா அரசாங்கத்திடம் கோரிக்கைவிடுத்துள்ளது.

குடிவரவு குடியகல்வு அமைச்சரைத் தொடர்புகொண்டு நாடுகடத்தலை நிறுத்த அழுத்தம் கொடுக்குமாறு  சிறிலங்காவில் காலடி எடுத்துவைக்கும்போது உயிருக்கு உத்தரவாதமில்லாத நிலையில் உள்ள இளைஞனின் சார்பாகக்  கேட்டுக்கொள்கின்றோம்.

Telephone: 02 6277 7860
Email: minister@immi.gov.au

No comments:

Post a Comment