நீண்டகாலமாக பௌத்த பிக்குமார் குறித்த பற்றிவாசலுக்கு ௭திர்ப்புகளையும் அச்சுறுத்தல்களையம் விடுத்து வந்துள்ள நிலையில், திடீரென நேற்று இரவு 7.30 மணியளவில் பிக்குமாரும் ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலரும் பள்ளிவாசலுக்கு முன்பாக பிரித் ஓதியுள்ளனர்.
இதனையடுத்து, பள்ளிவாசல் நிர்வாகிகள் வெல்லவ பொலிஸிற்கு முறைப்பாடு செய்துள்ளனர். அவ்விடத்திற்கு வந்த பொலிஸார் பள்ளிவாசலை மூடும்படி கூறியதாக மேல் மாகாண சபை உறுப்பினர் முஜுபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் குறிப்பிடுகையில்,
பாலர் பள்ளியாக நீண்டகாலமாக இயங்கிவந்த மேற்படி இடத்தில் முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு அப்பிரதேச மக்களும் பிக்குமாரும் ௭திர்ப்புத் தெரிவித்து வந்துள்ளனர்.
இதனை ஏற்றுக் கொள்ள மறுத்த மேற்படி முஸ்லிம் நிலையத்தை சார்ந்தவர்கள் தொடர்ந்தும் தொழுகையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இதனை ஏற்றுக் கொள்ள மறுத்த மேற்படி முஸ்லிம் நிலையத்தை சார்ந்தவர்கள் தொடர்ந்தும் தொழுகையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இதனை கண்டித்து நேற்றிரவு அப்பிரதேச மக்களும் பிக்குமாரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமையால் இருதரப்பு பாதுகாப்பினைக் கருத்திற்கொண்டு பள்ளிவாசலை மூடி, பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், இன்று அங்கிருந்த பிக்குமாரையும் பிரதேசவாசிகளையும் பள்ளிவாசல் நிர்வாகிகளையும் பொலிஸ் நிலையத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளாகவும் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment