
நல்லூர் கொடியேற்ற திருவிழாவில் கலந்துகொண்ட பக்தர்களின் சுமார் ஐந்து லட்சம் ரூபாவுக்கு மேற்பட்ட தங்க நகைகள் திருடப்பட்டுள்ளதாக ஆலயத்திலுள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயக் கொடி யே ற் றத் தில் கலந்துகொள்வதற்காக நேற்று செவ் வாய்க்கிழமை வருகை தந்திருந்த பக் தர் ஒருவரின் நான்கு பவுண் தங்கச் சங்கிலி காணா ம ல் போயுள்ளமை தொடர்பாக தம க்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரி வித் தார்.
யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை கூழா வடி வீதியை வசிப்பிடமாகக் கொண்ட 65 வய துடைய கனகசபை சரஸ்வதி ௭ன்ற பெண் ணின் தங்கச் சங்கிலியே இவ்வாறு காணா மல் போயுள்ளது.
நல்லூ ருக்கு வரும் பக்தர்கள் தங்களது தங்க ஆபரணங்கள் தொடர்பாக விழிப்பாக இரு ப்பதோடு அதை அணிந்து வருவதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
நாட்டின் பல பாகங்களிலுமிருந்து மக்கள் வருகை தருவதினால் யாழ்.நல்லுாரைச் சுற்றி சுமார் 1200 பொலிஸார் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.
மக்களின் பாதுகாப்பு க் காக சிவில் உடையில் பொலிஸார் கடமை யில் ஈடுபட்டுள்ளனர்.
கொடியேறும் நேரம் ஏற்பட்ட சன நெரிசலை சாதகமாக பயன்படுத்திய திருடர்கள் மிகவும் நுட்பமாக இந்த திருட்டு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொடியேற்றம் முடிந்து வெளியே வந்த பின்னரே தமது தங்க நகைகள் திருட்டுப் போயுள்ளதை உரியவர்கள் கண்டுள்ளனர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
No comments:
Post a Comment