இந்தியாவுக்குள் நுழையும் சிறிலங்காப் படையினரைக் கண்காணிக்க, சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு காவல்துறையின் உளவுப்பிரிவினரும், கியூ பிரிவினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். எனினும் அவர்களின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டே சிறிலங்கா விமானப்படையினர் நால்வர் மாற்று உடையில் சென்னை ஊடாக கொல்கத்தாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேற்று முன்தினம் அதிகாலை 4.30 மணியளவில் ஜெட் எயர்வேய்ஸ் விமானம் மூலம் கொழும்பில் இருந்து சென்னை வந்த இவர்கள், அங்கிருந்து காலை 6.30 மணியளவில் கொல்கத்தாவுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.
சிறிலங்காப் படையினரின் பயணங்களை, சென்னை விமான நிலையத்தில், கியூ பிரிவு காவல்துறையினரும், தமிழ்நாடு உளவுத் துறையினரும், தீவிரமாக கண்காணித்து வந்தனர்.இதனால், மாற்றுஉடையில், சிறிலங்காப் படையினர் கொல்கத்தாவுக்குச் சென்றுள்ளனர்.
அவர்கள் கொல்கத்தா சென்ற பின்னரே, தமிழ்நாடு உளவுப்பிரிவுக்கு இந்த விபரம் தெரியவந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment