Translate

Wednesday 25 July 2012

தமிழினத்தினுடைய துயர அடையாளமாகவே பிள்ளையான்


பிள்ளையான் ஒரு மறக்கப்பட்ட மனிதர். தமிழ் மக்களைப் பொறுத்தவரை ஒரு இனத்தினுடைய துயர அடையாளமாக பிள்ளையான் விளங்குகிறார். என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சாடியுள்ளது.

சிறுபாண்மைத் தேசிய இனங்களை இணைக்கும் ஒரு முயற்சியாகவே வடக்கு கிழக்குக்கான தேர்தல் அமைந்துள்ளது. அத்தேர்தல் மூலம் பிள்ளையானுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என என கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண சபைத் தேர்தல் குறித்து கருத்துரைக்கையிலேயே சுரேஷ் பிரேமச்சந்திரன் இவ்வாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
வடக்கு கிழக்கு மாகாண சபையில் சிறுபாண்மை அரசை உருவாக்கி அதன்மூலம் சிறுபான்மைத் தேசிய இனங்கள் ஒன்றிணைந்த வடக்கு கிழக்கை ஏற்படத்துவதற்கான ஒரு முயற்சியாக கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடுகின்றது.
தங்களின் வாழ்வியல் பூமியில் தங்களது நிலங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக இரு சிறுபான்மை தேசிய இனங்களும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் களம் இறங்கியுள்ளது.
முஸ்லிம் மக்களும், தமிழ் மக்களும் தனித்துவமான இரு இனங்கள். அவைகளின் தனித்துவ உரிமைகள் பேணப்படுவதற்காக முதலமைச்சர் பதவி பகிரப்படுவதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றன.
தமிழ் மக்களைப் பொறுத்தளவில் இது ஓர் அதிகாரமில்லாத சபை. இதற்கு ஏன் போட்டியிட வேண்டும்? என்ற கேள்விகள் நிலவுகின்றன. இந்த அதிகாரமில்லாத சபையை வைத்துக் கொண்டுதான் எமக்கான அதிகாரத்தை பெற்றுக் கொள்ள முடியும். இதன்மூலம் ஒட்டுமொத்த தமிழ் முஸ்லிம் மக்களின் தேசியம் காப்பாற்றப்பட வேண்டும்.
முஸ்லிம் மக்களின் எதிர்காலத்தை நேசிப்பவர்களாக முஸ்லிம் காங்கிரஸ் இருக்கிறது. சிவநேசத்துரை சந்திரகாந்தன் மறக்கப்பட்ட மனிதர். தமிழ் மக்களைப் பொறுத்தவரை ஒரு இனத்தினுடைய துயர அடையாளமாக அவர் இருக்கின்றார். இந்தத் தேர்தலின் மூலம் அவரை கட்டாயம் வீட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும். என்றார்.

No comments:

Post a Comment