ஆட்கடத்தல் மோசடிக்காரர்களிடம் உயிரை மாய்க்கும் வெளிநாட்டுப்பயணம் - வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு.
இலங்கை மற்றும் இந்தியாவிலிருந்து தமிழர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக அழைத்துவந்து மோசடி செய்வோரின் செயற்பாடுகள் அதிகரித்துவரும் நிலையில் கடந்த வருடம் தன்சானியாவில் தற்கொலை செய்துகொண்ட யுவதி ஒருவரது புகைப்படமும் மேலதிக விபரங்களும் கிடைக்கப்பெற்றுள்ளன.
வெளிநாட்டுக்கு ஆட்களையனுப்பும் சட்டவிரோத பயணமுகவரான இலண்டனில் வாழும் லிங்கன் என அறியப்படுபவரால் சுவிசுக்கு அனுப்புவதற்காக அழைத்துவரப்பட்ட யாழ் தீவகத்தை சொந்த இடமாக்கொண்ட 27 வயதையுடைய செல்வராணி (செல்வி) கடந்த வருடம் தன்சானியா நாட்டில் தற்கொலை செய்துள்ளார் என்பது அவரது உறவினர்களாலும் அவருடன் பயணத்தை மேற்க்கொண்டிருந்த சக பயணிகளாலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேற்படி செல்வி இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து தமிழகத்தில் தங்கியிருந்து கல்வி கற்று வந்திருந்த நிலையில் 2010ம் ஆண்டு சுவிசிற்கு செல்வதற்காக கென்யாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டு ஒரு ஆட்கடத்தல்காரரது வீட்டில் தங்கவைக்கப்பட்டு பின்னர் அங்கிருந்து தன்சானியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டு தங்கவைக்கப்பட்டிருந்தார். சுமார் 14 மாதங்களாக தனது பயணத்தை தொடர்ந்த செல்வி தனது வாழ்வை பாதிவளியில் முடித்துக்கொண்டதற்கான காரணம் சுகவீனம் என தெரிவிக்கப்பட்டு செல்வியின் மாமனாரிடமிருந்து பெறப்பட்ட பணம் முப்பதினாயிரம் டொலர்களும் பயணமுகவரான லிங்கம் என்பவரது சுவிசில் வசிக்கும் உதவியாளரால் மீழக்கையளிக்கப்பட்டிருந்தாக அறியவருகிறது.
செல்வியோடு சம காலத்தில் அதேபகுதியில் பயணத்திற்காக தங்கவைக்கப்பட்டிருந்த தற்போது சுவிசில் வாழும் நபர் ஒருவரது தகவலின்படி செல்வி தனிமைப்படுத்தி தங்கவைக்கப்பட்டிருந்ததன் நோக்கம் பாலியல் ரீதியான உள்நோக்கம் கொண்டே காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிது. இதை செல்வியின் உறவினர்களும் தற்போது ஏற்றுக்கொண்டுள்ளனர். பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை தான் சந்திப்பதாக செல்வி அதேநாட்டில் தங்கியிருந்த சிலரிடம் சொல்லாமல் சொல்லிவந்துள்ளார். தன்னை திருப்பியனுப்புமாறும் உறவினரிடம் மன்றாடியுள்ளார். பயணத்திற்கான பயணமுகவரான லிங்கம் பணத்தை கட்;டம் கட்டமாக முற்றாக பெற்றுவிட்ட நிலையில் திருப்பியனுப்ப மறுத்துள்ளார். சமகாலத்தில் செல்வியின் மாமனாரும் பயணத்தை தொடருமாறு செல்வியிடம் வற்புறுத்தியுள்ளார் என தெரியவருகிறது.
செல்வி தன்சானியாவிலுள்ள லிங்கனது இடைத்தங்கல் வீட்டிலேயே தங்கவைக்கப்பட்டிருந்தார். லிங்கன் வெளியூர் சென்றுவரும்போது அந்நாட்டவரான பெண்னொருவரே செல்வியை கவனித்துவந்துள்ளார். அதை உறவினர்களும் அறிந்திருந்தனர். அதே லிங்கனது பயணிகளான 3 இழைஞர்கள் வேறொரு வீட்டில் தங்கவைக்கப்ட்டிருந்தனர்.
இவர்களுக்கிடையில் தொலைபேசித் தொடர்பு இருந்துள்ளது. எமக்கு கிடைத்துள்ள நம்பகமான தகவலின்படி செல்வி தற்கொலை செய்தபோது லிங்கள் அங்கேயே தங்கியிருந்துள்ளார். செல்வி சுகவீனமடைந்திருப்பது உண்மையாயின் செல்வியோ அல்லது அவரது பயணமுகவர் லிங்கனோ ஏன் உறவினர்களுக்கு அறிவிக்கவில்லை என்பதே கேள்வி? இதை லிங்கனிடம்தான் கேட்கவேண்டும்.
இந்த லிங்கன் என்பவர் கடந்த 15 வருடங்களாக லண்டனில் வசித்துவருகிறார் இவருக்கு லண்டனில் இரண்டு எரிபொருள் நிரப்பு நிலையங்கள் சொந்தமாகவுள்ளதாக அறியவருகிறது. அதேபோல் தன்சானியாவிலும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் சொந்தமாக உள்ளன.
இவரது சொந்தப்பெயர் மற்றும் முகவரி எமக்கு கிடைத்திருந்தாலும் நன்கு உறுதிப்படுத்த முடியதகாரணத்தினால் தற்போது வெளியிடமுடியவில்லை.
மேற்படி லிங்கன் என்பவர் ஊடாகவே ஆட்கடத்தல் மோசடியில் பலரை ஏமாற்றிய முகவரான ஸ்கந்தபுரத்தைச் சேர்ந்த சு10ரி - சோபாவும் 2011 ஏப்ரல் மாதமளவில் இலண்டனுக்கு பயணமாகி அங்கு அகதி தஞ்சம் கோரியுள்ளார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவரது கணவரான சூரி அல்லது அப்பன் என அறியப்படும் நபர் சுவிசில் அல்லது லண்டனில் தற்போது தலைமறைவாகியுள்ளார்.
இலண்டனில் லிங்கம் என்பவரைப்பற்றிய தகவல்கள் இயற்பெயர் மற்றும் முகவரி தெரிந்தோர் எமக்கு அனுப்பிவைத்தால் உறுதிப்படுத்தியபினர் படத்துடன் வெளிச்சத்திற்கு கொண்டுவருவோம்.
தற்போது லிங்கள் இலங்கையில் தலைமறைவாகியிருந்து ஆட்சேர்ப்பில் ஈடுபட்டுவருவதாக தெரியவருகிறது.
பயணத்தை பாதிவளில் முடித்துக்கொண்ட செல்வியின் அப்பா கடலில் தொழிலுக்கு சென்று காணாமற்போய்விட்டார். செல்வியின் உறவினர்களிடம் நாம் அளித்துள்ள வாக்குறுதிகளுக்கு அமைய இப்புகைப்படத்தை மட்டுமே வெளியிடமுடிகிறது என்பதை அறியத்தருவதோடு அவரது சுயவிபரம் அனைத்தும் வெளியடுவது தவிர்க்கப்படுகிறது.
எனவே வெளிநாடு என்று உங்களது சொத்துக்களை விற்றுவாரி ஈடுவைத்து கடமைப்பட்டு கடன்பட்டு புறப்படுவோர் நீங்கள் மேற்;க்கொள்ளும் பயணம் பற்றிய அனைத்து நன்மை தீமைகளையும் மறுபரிசிலணை செய்துகொள்ளவேண்டியது அவசியமாகிறது.
மேலும் பல ஆகாய மற்றும் கப்பல் மூலமான ஆட்கடத்தல் மோசடிக்காரரது தகவல்கள் எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளன. அவைகளும் விரைவில் வெளிச்சத்திற்கு வரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
இலங்கையில் சிங்களவர்கள் தமிழர்களது காணிகளை புடிக்கிறார்கள் சொத்துகளை அள்ளுகிறார்கள் பறிக்கிறார்கள் என குமுறி எழுந்து போராடும் தமிழினம் - தமிழர்கள் மத்தியில் சாத்தான்களாக மறைந்திருந்திருந்து உள்ளிருந்து சுரண்டும் இவர்கள்மீதும் கவனம் கொள்வது காலத்தின் கட்டாயமாகிறது.
இத்தகவல்களை திரட்டி வெளியிடும் நாம் தமிழர்களது வெளிநாட்டுப்பயணங்களுக்கோ அவர்களது தனிமனித உரிமையுடன் கூடிய செயற்பாடுகளுக்கோ எதிரானவர்கள் இல்லை என்பதை தெரிவித்து மாறாக சுரண்டல்கள் சுத்துமாத்துகளுக்கு எதிரானவர்கள் என்பதை அறியத்தருகிறோம். இந்தச் சுரண்டல் காரர்களுக்கு எதிராக தேவைப்படுமாயின் நீதிமன்றங்களிலும் ஆவணங்களுடன் சமூகம்தர தயாராக உள்ளோம்.
ஆட்கடத்தல் தொழிலில் சுரண்டல் சுத்துமாத்துக்காரர்களால் பாதிக்கப்பபட்டோர் தங்களது தகவல்களை எமக்கு அனுப்பிவைப்பதன் மூலம் அவற்றை தீர ஆராய்ந்து நாம் வெளியிட்டுவைப்போம் இதனால் இனிவருங்காலங்களில் எமது சமூகம் பாதிப்படையாமல் விழிப்பாக இருப்பதை உண்டுபண்ணமுடியும் என்பதை தெரியப்படுத்துகிறோம்.
எமது மின்னஞ்சல் முகவரி: theepikalanka@gmail. com
அனீதிகளுக்கும் மோசடிகளுக்கும் எதிரான புலம் பெயர் இலங்கையர் குழு.
No comments:
Post a Comment