Translate

Wednesday 25 July 2012

ஐ.நாவுக்கு வாக்குமூலம் வழங்கியவரை இலங்கையிடம் ஒப்படைக்க அவுஸ்.முயற்சி


தஞ்சம் வழங்குவது இப்படித்தானா? - ஏக்கத்தில் உறவுகள்

(சிட்னி) கடந்த 2009ஆம் ஆண்டு வன்னியில் இடம்பெற்ற போரின் இறுதியில் இராணுவத்தின ரால் பிடிக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட நபர் ஒருவர் தற்போது அவுஸ்திரேலியாவில் அகதித் தஞ்சம் கோரியுள்ளார். கடந்த 2010ஆம் ஆண்டு இறுதிப் பகுதியில் அவுஸ்திரேலியாவுக்கு அகதியாகச் சென்ற இவர் தற்போது அவுஸ் திரேலியாவில் தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளார்.


ஐ.நா. விசாரணை இன்னும் முடிபுறாத பட்சத்தில் விசாரணை முடிபுறும்வரை இவரை இலங்கைக்கு அனுப்ப வேண்டாம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கு எதிரான சித்திரவதை விசாரணைக்குழு, அவுஸ்திரேலியா அரசினை கேட்டுக்கொண்டுள்ள போதும் அவுஸ்திரேலியா இவரை இலங்கைக்குத் திருப்பி அனுப்பவுள்ளவர்களின் பட்டியலில் இணைத்து இலங்கைக்கு அனுப்ப முடிபு செய்துள்ளது.

குறித்த நபர்இராணுவத்தின் மோசமான சித்திரவதையின் காரணமாக சற்று மன நிலை குன்றிய நிலையில் முகாமில் இருந்து விடுதலையாகிய பின்னர், இலங்கையில் தனது தனது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இருப்பதை உணர்ந்து அவுஸ்திரேலியாவிற்குத் தப்பிச் சென்றார். ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கு எதிரான சித்திரவதை விசாரணைக் குழு வினருக்கு அவுஸ்திரேலியாவில் அடைபட் டுக் கிடந்த அன்பு தனது சாட்சியினை வழங் கியிருந்தார்.

இதேவேளை கடந்த ஆண்டு ஏப்ரல் 25-ம் திகதி மீண்டும் இவருக்கான பிடியாணை யை இலங்கை அரசு வழங்கியுள்ளமையும் தற்போது அவுஸ்திரேலிய அரசு இவரை இலங்கைக்கு திருப்பியனுப்பவுள்ளவர்கள் பட்டியலில் இணைத்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வன்னியில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு வேலை செய்தார் என்ற ஒரே காரணத்திற்காக ஏற்கெனவே கடுமையான சித்திர வதைகளை அனுபவித்து மனநிலை பாதிக்கப்பட்டிருந்த இவர், தற் போது இலங்கை அரசிற்கும் அரச படை களுக்கும் எதிராக அவர்களின் குற்றச் செயல் கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபைக்கு வாக்குமூலம் அளித்துள்ள நிலையில் அவர் மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டால் அவரின் உயிருக்கு நிச்சயம் ஆபத்து ஏற்படலாம் என்ற அச்சத்தில் உறவினர்கள் உள்ளனர்.

இவரின் நாடுகடத்தலுக்கு எதிராக தமிழ் அமைப்புகள்,மனிதநேய செயற்பாட்டா ளர்கள் ஆவன செய்ய வேண்டும் எனவும் உறவினர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு இணங்க புகலிடக் கோரிக்கையாளர்களை திருப்பி அனுப்பி வைக்க முடியாது என அவுஸ்திரேலிய குடிவரவுத் துறை அமைச்சர் கிறிஸ் பொவன் அண்மையில் தெரிவித் திருந்த நிலையிலேயே இச்சம்பவம் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment