Translate

Thursday, 26 July 2012

எம்.கே.சிவாஜிலிங்கம் சற்று முன்னர் இராணுவத்தினரால் கைது



ரெலோ அமைப்பின் அரசியல் பொறுப்பாளரும், த.தே. கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் இன்று இரவு பொலிஸாராலும்,இராணுவத்தினராலும் கைது செய்யப் பட்டிருக்கின்றார்.
இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்டவர்களையும், படுகொலைச் சம்பவத்தையும் நினைவு கொள்ளும் வகையில், சுவரொட்டிகளை நெல்லியடி பகுதியில் ஒட்டிக்கொண்டிருந்துள்ளார்.
இதன்போது அங்கு வந்த பொலிஸாரும், படையினரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் என்ற அங்கீகாரத்தையும் வழங்காமல் கடுமையான முறையில் நடந்து கொண்டுள்ளனர்.
இதனை நகரப் பகுதியில் நின்றிருந்த சிலர் பார்த்துள்ளனர். இதன் பின்னர் சிவாஜிலிங்கத்தையும், அவருடனிருந்த 8 பேரையும் பொலிஸார் கைது செய்து, இரவு 9மணியளவில் நெல்லியடி பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர்.
தற்போதும் அவர்கள் பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணை செய்யப்பட்டு வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment