தமிழர் தாயகப் பகுதிகளில் தமிழ் மக்களை வலிந்து சண்டைக்கு அழைப்பது போல் அதிகரித்து வரும் சிங்கள இனவாதத்தின் நில ஆக்கிரமிப்புக்களையும் சிங்களப் படையினரின் தமிழ் மக்கள் மீதான கொடுமைகளையும் கண்டு தமிழ் மக்கள் கொதித்துப்போயுள்ள நிலையில், வேறு வழியின்றி தமிழ் மக்கள், சிங்களப் படையினரை எதிர்க்கவும் துணிந்துவிட்டனர்.
தம்மைச் சந்திக்க வரும் வெளிநாட்டவர்களிடமும் தமது நிலை பற்றியும் படையினரால் தமக்கு நேரும் அவலம் பற்றியும் எடுத்துரைக்க ஆரம்பித்துள்ளனர். படையினரின் நில ஆக்கிரமிப்புக்கு எதிராகப் பல இடங்களில் மக்கள் வழக்குத் தாக்கல் செய்யவும் முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழர் தாயகப் பகுதிகளில் தொடரும் நில ஆக்கிரமிப்பை கண்டித்து நேற்று திங்கட்கிழமை யாழ்.நகரில் மத்திய பேருந்து நிலையம் முன்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் அகிம்சை வழியில் ஏற்பாடுசெய்த போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை உத்தரவு விதித்தது. அங்கு கலகம் அடக்கும் காவல்துறையினரும் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டு ஆர்ப்பாட்டத்தை நடக்க விடாமல் நிறுத்தப்பட்டதுடன், ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளவந்தவர்களும் வீதியால் சென்ற பொதுமக்களும் விரட்டி அடிக்கப்பட்டனர். இதனால் அங்கு முறுகல் நிலை ஏற்பட்டது.
இவ்வாறான செயற்பாடுகள் சர்வதேசத்தை இலங்கையின் பால் திரும்பிப் பார்க்கவைத்துவிடும் என சிறீலங்கா இனவாத அரசு அச்சமடைந்துள்ளது. இதனால் காணி அபகரிப்புக்கெதிராக - சிங்களப் படையினருக்கு எதிராக - குரல் கொடுக்கும் பொதுமக்கள் இராணுவப் புலனாய்வாளர்களால் அவதானிக்கப்பட்டும் மிரட்டப்பட்டும் வருகின்றனர்.
இந்நிலையில், முல்லைத்தீவு- திருமுறிகண்டி பிரதேசத்தில் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பொதுமக்களின் நிலத்தை விடுவிக்க வலியுறுத்தி நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்தவர்களை படைப் புலனாய்வாளர்கள் என தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் சிலர் தொடர்ச்சியாக அச்சுறுத்தி வருவதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அந்த மக்களைச் சொந்த இடங்களில் குடியேற்றாமல், கொக்காவில் பகுதியில் மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தநிலையில் அவர்கள் தம்மை சொந்த இடங்களில் குடியேற்ற வலியுறுத்தியே மாவட்ட நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். இவ்வாறு வழக்குத் தொடர்ந்த பொதுமக்கள் சிலரின் வீடுகளுக்கு புலனாய்வாளர்கள் என தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு சிலர் சென்றுள்ளனர்.
வழக்குத் தொடுத்ததன் பின்னணியில் அரசியல் கட்சிகள் உள்ளனவா? உங்களுடைய நிலம் என்பதற்கு என்ன ஆதாரம் உங்களிடம் உள்ளது? என்பன குறித்து விசாரணை நடத்தியுள்ளனர். சிலரை மறுநாள் படைமுகாமிற்குச் சென்று இது தொடர்பாக விளக்கமளிக்குமாறும் அவர்கள் வற்புறுத்தியுள்ளனர். எனினும் மறுநாள் அவர்கள் முகாமிற்குச் சென்றிருந்தபோது அவ்வாறான எவரையும் தாம் அனுப்பவில்லை என மறுத்துள்ளனர்.
இவ்வாறானவர்கள் மீண்டும் மீண்டும் மக்களுடைய வீடுகளுக்குச் சென்று வழக்குடன் தொடர்
புடையவர்கள் பற்றிய விபரங்களை கேட்டுள்ளனர். எனினும் தமக்கும் அதற்கும் தொடர்பில்லை எனக்கூறும் படையினர் இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் புலனாய்வாளர்கள் எனத் தம்மை அடையாளப்படுத்திக் கொண்டவர்கள் உண்மையாகவே புலனாய்வாளர்களா என்பதை உறுதிப்படுத்த முடியாதுள்ளது.
எனவே இந்த நடவடிக்கை பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நன்கு திட்டமிடப்பட்ட வகையில் மேற்கொள்ளப்படுகின்றது என்பதே உண்மை. குறித்த பிரதேசத்தில் சுமார் 163 குடும்பங்களுடைய நிலம் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இக்குடும்பங்களில் 117 குடும்பங்கள் உறவினர் நண்பர்கள் வீடுகளிலும், 46 குடும்பங்கள் வவுனியா முகாம்களிலும் வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலத்திலேயே, யுத்தத்தில் அங்கவீனர்களாக்கப்பட்ட படையினருக்கான ஆயிரம் வீட்டுத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறே, திருகோணமலை மாவட்டத்திலுள்ள சம்பூர் கிராமத்தில் விசேட கனரக கைத்தொழில் வலயம் ஒன்றை அமைப்பதற்கு வகைசெய்யும் அரசாங்க வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக இடம்பெயர் கிராம வாசிகள் ஏழுபேர் உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமைமீறல் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளனர்.
இந்தக் கிராமத்தில் தமது உடைமைகள் உள்ளடங்கியிருப்பதாகவும், தமது குடும்பங்கள் பல தசாப்த காலங்களாக இந்த உடைமைகளுக்கு உரித்துரிமை உடையவர்கள் என்றும் அந்த மனுவில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். திருகோணமலையில் 2007ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு வந்தபோதிலும், கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தாம் தொடர்ந்தும் தற்காலிக இடங்களில் இடம்
பெயர்ந்தவர்களாக இருந்துவருவதாகவும் அவர்கள் அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.
அவசரகாலப் பிரகடனம் 2011ம் ஆண்டு காலாவதியாகிவிட்டதை அடுத்து, உயர் பாதுகாப்பு வலயம் சட்டரீதியாக நடைமுறையில் இருந்து இல்லாமல் போய்விட்டது. ஆயினும் தாம் தமது சொத்துடைமைகளைப் பெற்றுக்கொள்வதை அரசாங்க அதிகாரிகளும், படையினரும் தொடர்ந்தும் தடுத்து வருகிறார்கள் என்றும் அம்மக்கள் தமது மனுவில் மேலும் குறிப்பிட்டுள்ளனர். இதனையடுத்து குறித்த பொதுமக்களும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, தமிழர் தாயகத்தின் யாழ்.குடாவை ஆக்கிரமித்துள்ள ஒட்டுக்குழுவான ஈ.பி.டி.பியினர், சிங்கள கொடுங்கோல் இனவெறியர்களின் காணிச் சுவீகரிப்புகளுக்கு உடந்தையாகச் செயற்படுகின்றனர் என்று கிளிநொச்சி மக்கள் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளனர். கிளிநொச்சியிலுள்ள பல ஏக்கர் கணக்கான காணிகளை சிறிலங்காப் படையினர் சுவீகரித்து வருகின்ற நிலையில் - இதற்கு எதிராக மக்களின் எதிர்ப்புகளும் அதிகரித்து வருகின்ற நிலையில் - சர்வதேசத்தின் பார்வை சிறிலங்கா இனவாதத்தின் மேல் படத்தொடங்கியுள்ள நிலையில் - மக்களைச் சமாளித்து, மக்கள் கொதித்தெழுவதைத் தடுப்பதற்காக புதிய வழியன்றைக் கையாண்டுள்ளது. அதாவது தமிழ்பேசும் தமது கைக்கூலிகளான ஈ.பி.டி.பி ஒட்டுக் குழுவினரை நில ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரச உயர் மட்டம் பணித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழர் தாயகத்திலுள்ள பெருமளவான நிலங்கள் தினம் தினம் சிங்கள பேரினவாதத்தால் சுவீகரிக்கப்பட்டு வருகின்ற நிலையில், இதற்கு எதிராக ஈ.பி.டி.பி. ஒட்டுக்குழு இதுவரை எந்தக் கருத்தையும் முன்வைக்கவில்லை. இந்நிலையில் இந்த நில ஆக்கிரமிப்புக்கு எதிராக மக்களை கிளர்ந்தௌ முடியாமல் அடக்கி வைத்திருக்கும் செயற்பாட்டில் மக்கள் முன் நேரடியாக இந்த ஒட்டுக்குழு களமிறங்கியுள்ளமை குறித்தும் தமிழ் மக்கள் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியதுபோல் மேலும் கொதிப்படைந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த வாரம் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் வருண் முகர்ஜி தலைமையில் சட்ட மன்ற உறுப்பினர் கதிரவன் போவோர்ட் பிளாக் தேசிய செயலாளர் தேவராஜன் ஆகியோர் வன்னிப் பிரதேசத்துக்குப் பயணம் செய்து அங்குள்ள நிலைமைகளைப் பார்வையிட்டு சென்னை திரும்பிய அவர்கள் அங்கு மக்களின் இன்றைய உண்மைநிலையை வெளிப்படுத்தியுள்ளனர்.
இலங்கைதீவில் என்ன நடக்கிறது என்ற உண்மை நிலையைக் கண்டறிவதற்காகச் சென்ற அவர்கள், அங்கு 3 நாள் முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால், கிளிநொச்சி, வவுனியா உள்ளிட்ட பல பகுதிகளைப் பார்வையிட்டுள்ளனர். வன்னி முகாம்களில் தமிழர்களை சந்தித்துப் பேசிய அவர்கள், அங்கு தமிழர்களின் நிலை இன்னும் மிக மோசமாகத்தான் உள்ளது எனவும் - இலங்கையில் நடக்கும் கொடுமைகளைச் சொல்லத் தமிழர்கள் பயப்படுமளவிற்கு சிங்கள படையினர் அவர்களை மிரட்டி வைத்துள்ளனர் எனவும் - இலங்கை சென்று திரும்பிய இந்தியக் குழு சென்னையில் வைத்து ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளது.
தமிழர்கள் புனர்வாழ்வுக்கு இந்திய அரசு ஆயிரம் கோடி ரூபா கொடுத்துள்ளது. அந்தப் பணத்தில் தமிழர்கள் வசிக்கும் பகுதியில் வீதிகள் செப்பனிடப்பட்டுள்ளதைத் தவிர மற்ற அடிப்படை வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை. தமிழர்கள் வீடு கட்ட தலா 3 லட்சம் ரூபா கொடுக்கின்றனர். அது போதுமானதாக இல்லை. தமிழர்கள் வசிக்கும் பகுதியில் 89 ஆயிரம் பெண்கள் தங்களது கணவர் இறந்து விட்டாரா இருக்கின்றாரா என்னவென்று தெரியாமல் தவிக்கின்றனர். தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துப் பேசினோம். புத்தமத வழிபாட்டுக்கு மட்டும் முக்கியம் அளிக்கின்றனர்.
தமிழர்கள் அவதிப்படும் கொடுமைகளைப் பற்றி புகைப்படம் வீடியோ எடுத்துள்ளோம். நாங்கள் சேகரித்த ஆவணங்களை வைத்து போவோர்ட் பிளாக் செயற்குழுவில் விவாதித்து அறிக்கை தயாரிக்கப்படும். அந்த அறிக்கையை இந்திய அரசிடம் வழங்குவோம். நாடாளுமன்றத்தில் இந்த பிரச்சினையை எழுப்புவோம் என்று இந்தியக் குழுவினர் கருத்துவெளியிட்டுள்ளார்கள் .
இதுதான் இன்றைய தமிழ் மக்களின் நிலை என்பதை சர்வதேசம் புரிந்துகொள்ளவேண்டும். அங்கு யுத்தம் முடிந்துவிட்டது என விடுமுறையில் புலம்பெயர் நாடுகளில் இருந்து பயணம் செய்யும் எம்மவர்களும் இதைப் புரிந்துகொள்ளவேண்டும். நீங்கள் அங்குள்ள கொடுமைகளையும் சற்றுக் கேட்டுவாருங்கள். உங்களின் வார்த்தைகளிலேயே அவர்களின் எதிர்காலம் தங்கியுள்ளது.
உரியவர்களே இது உங்களின் கவனத்திற்கு!
(சூறையாடல்கள் தொடரும்)

தமிழர்கள் அவதிப்படும் கொடுமைகளைப் பற்றி புகைப்படம் வீடியோ எடுத்துள்ளோம். நாங்கள் சேகரித்த ஆவணங்களை வைத்து போவோர்ட் பிளாக் செயற்குழுவில் விவாதித்து அறிக்கை தயாரிக்கப்படும். அந்த அறிக்கையை இந்திய அரசிடம் வழங்குவோம். நாடாளுமன்றத்தில் இந்த பிரச்சினையை எழுப்புவோம் என்று இந்தியக் குழுவினர் கருத்துவெளியிட்டுள்ளார்கள்
இதுதான் இன்றைய தமிழ் மக்களின் நிலை என்பதை சர்வதேசம் புரிந்துகொள்ளவேண்டும். அங்கு யுத்தம் முடிந்துவிட்டது என விடுமுறையில் புலம்பெயர் நாடுகளில் இருந்து பயணம் செய்யும் எம்மவர்களும் இதைப் புரிந்துகொள்ளவேண்டும். நீங்கள் அங்குள்ள கொடுமைகளையும் சற்றுக் கேட்டுவாருங்கள். உங்களின் வார்த்தைகளிலேயே அவர்களின் எதிர்காலம் தங்கியுள்ளது.
உரியவர்களே இது உங்களின் கவனத்திற்கு!
(சூறையாடல்கள் தொடரும்)
No comments:
Post a Comment