வரலாற்று குப்பை தொட்டிக்குள் வீழ்ந்து விடாமலிருக்க... ச.ச.முத்து
நேற்று வரை இருந்த காட்சி அமைப்புகள் மாறிக்கொண்டு வருகின்றது. அரங்குகள் மாறிக்கொண்டே இருக்கும் சர்வதேச அரசியலில் சிங்கள தேச ஆட்சியாளர்களுக்கு எதிரான போக்கும் ஆதரவான நிலைப்பாடும் நிரந்தரமான ஒன்றல்ல.
முதலில் ஒன்றை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். மேற்குலகு மகிந்தவை தமது நிரந்தர பகையாளியாக வரித்துக்கொண்டு நிற்கவில்லை. மகிந்த 2006ல் மாவிலாற்றில் தமிழினத்தை அழிப்பதற்கான யுத்தத்தை ஆரம்பித்தபோது அதற்கு ஆரத்தி எடுத்து வாழ்த்தியவர்கள் வேறு யாருமல்ல. இதே மேற்குலகம்தான்.
அப்படியானால் ஏன் இப்போது மேற்குலகு அங்கு நடந்த போர்க்குற்றங்களை தூசு தட்ட வேண்டும். இந்த இடத்தில் மேற்குலகின் கொள்ளை வகுப்பு சம்பந்தமான ஒரு கருத்தியலை கவனிக்க வேண்டும்.
மேற்குலகு என்பது புதிய நாடுகள் காலனிகள் என்பனவற்றை தேடித் தேடிக் கண்டுபிடித்த அதே போட்டி போடும் மனநிலையும்,தனது நலன்சார்ந்த சிந்தனையும் இன்றும் மாறாததாகவே இபபோதும் இருக்கிறது. அதே நேரம் அதன் சிந்தனை என்பது இதற்கு நேர்மாறான ஒரு வளர்ச்சி போக்கில் மிக எதிர்மாறான ஒரு பரிணாமத்தை அடைந்திருக்கிறது.
மேற்குலகு என்பது அது கண்டடைந்த தொழிற்புரட்சி மற்றும் அறிவியற் கண்டுபிடிப்புகளால் மிக முன்னேறியதாக அதன் சிந்தனையை வளர்த்திருக்கிறது. அது மானுடத்தின் அடுத்த கட்டமான பின் நவீனத்துவத்தில் தொடங்கி உலகு முழுதும் ஒரே மனிதன் என்ற கோட்பாடு வரை தன்னை செழுமை செய்துள்ளதையும் கவனிக்கத்தக்கது.
இங்குதான் அது தனது நலன்சார் அரசியலின் ஒரு அங்கமாக சிறீலங்காவுக்கு ஆயுத தளபாடங்களை அள்ளி வழங்கியதையும் (இன்னும் வழங்கிக்கொண்டும் இருக்கின்றன) அதே நேரம் அதன் இன்னொரு கருத்தியலின் தாக்கத்தால் சிறீலங்கா புரிந்த மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்களுக்காக சிங்கள ஆட்சியாளர்களை கண்டிப்பதையும் புரிந்து கொள்ளல் வேண்டும்.
மகிந்தருக்கு ஆயுதம் அள்ளிக்கொடுத்து முள்ளிவாய்க்கால் பொழுதுகளில் கண்மூடி மௌனமாக இருந்த மேற்குலகே தொடர்ந்தும் இருக்கும் அல்லது இருக்கவேண்டும் என்ற கனவு இருக்கத்தான் செய்யும்.
ஆனால் அது கலையும் நேரம் ஆரம்பாகி விட்டதை மகிந்தர் அண்மைக்காலமாக அனுபவ வாயிலாக அறிந்து தெரிந்து கொண்டிருக்கிறார்.
அண்மையில் லண்டன் வந்த மகிந்தருக்கு அங்கு நடந்த தமிழ் மக்களின் பெரும் எதிர்ப்பும் அதே நேரம் பிரித்தானிய ஆளும் தரப்பில் மகிந்தரை ஒரு தேவையற்ற விருந்தாளியாக காட்டியமை என்பனவும் வெளிவிவகார அமைச்சர் பீரிஸ்க்கு அமெரிக்கா கொடுத்த அழுத்தங்களும் பல செய்திகளை கூறியிருக்கும்.
சிலநாட்களுக்கு முன்னர் கியூபாபோயும் பிடல் காஸ்ரோவை சந்திக்க முடியாமல் போனதும் வேறுசில செய்திகளையும் சொல்லி இருக்கலாம்.
மகிந்த அரசுக்கு அழுத்தங்களை பிரயோகித்து அதன்மூலம் ஒரு தீர்வை பெற்றுத்தரும் யுக்தியை மேற்குலகு செயற்படுத்த ஆரம்பித்து விட்டதை போல தெரிகிறது. காட்சி மாற்றங்கள் அதனையே காட்டுகின்றன.
இலங்கைத்தீவின் இன முரண்பாட்டை தொடர்ந்து கவனித்துவரும் மேற்குலகின் சராசரியான ஒரு மனிதனுக்குகூட ஒன்று புரியும். சிங்கள ஆட்சியாளர்கள் ஒருபோதும் தமிழ் மக்களுக்கான உரிமைகளையோ தீர்வுக்கான அலகு எதனையுமோ வழங்கமாட்டார்கள் என்று.
ஏனென்றால் சிங்களபேரினவாத் கருத்தியல் என்பது சிங்களஅரசியல்வாதிகளின் செல்வாக்கு, தனிமனிதஆளுமை என்பனவற்றைவிடவும் மிகவும் பெரியது.தமிழர்களுக்கு உரிமை வழங்க எத்தனிக்கும் எவரையும் அது காலக் கல்லறைக்குள் புதைத்துவிடும்.
ஆகவே ஒரு புறத்தில் போர்க்குற்றசாட்டுகள்,மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை வைத்து மகிந்த அரசுக்கு அழுத்தங்களை செலுத்திக்கொண்டே அடுத்த பக்கத்தில் தமிழர் தரப்பு ஒரு தீர்வுக்கான புதிய கோரிக்கை ஒன்றை முன்வைக்கவும் தேவையான நகர்வுகளை மேற்குலகு செய்துவருகிறது.
தாயகத்திலும் புலத்திலும் தமக்கு சாதகமான அரசியல் சக்திகளை ஒன்றிணைய வைத்து அவர்களின் ஊடாக ஒரு தீர்வுக் கோரிக்கையை சிங்கள தேசத்துக்கு சமர்ப்பிக்க வைக்க போகின்றது.
அதனை நிறைவேற்றச் சொல்லி சிங்கள ஆட்சியாளர்களை வலியுறுத்தப் போகின்றது.
இதில் இருந்து நழுவுவதற்கான இராஜதந்திரங்களில் சிங்கள தேசமும் இறங்கி விட்டது. அது மேற்குலகை நோக்கி ஓரடி ஈரடியாக வைக்க தொடங்கிவிட்டது. ஆனால் தமிழர்கள் தரப்பில் இந்த தீர்வுக் கோரிக்கையை சமர்ப்பிக்கப் போகும் பெருமகன்கள் என்ன சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.
தமிழர்கள் சார்பில் தீர்வை முன்வைக்கும் அங்கீகாரத்தை தமக்கு மேற்குலகு வழங்கியதை அவர்கள் மிக பெருமையாக கருதிக்கொண்டு தொடர்ந்து மயிர்க்கூச்செறிந்து கொண்டு இருக்க முடியாது.
அவர்கள் மிக நுணுக்கமாக நகர்ந்தாகவேண்டிய சதுரங்கக் கட்டத்துள் நிற்கிறார்கள். ஒருபுறத்தில் மேற்குலகின் இராஜதந்திர நகர்வுகளால் சோர்ந்திருக்கும் சிங்களம் மேற்கின் காலடிகளில் வீழுவது போல பாவனை செய்து கொண்டே மறுபுறத்தில் சம்பிக்க ரணவத்த போன்றவர்களின் குரலின் ஊடாக தமிழர்கள் உரிமை கேட்டால் மீண்டும் பேரழிவு நடக்கும் என்ற தோரணையில் மீண்டும் 100 முள்ளிவாய்க்கால் நடக்கும் என்று சொல்லி இருப்பது ‘தமிழர்ளே' கேட்பதை அளந்து கேளுங்கள்’ என்ற எச்சரிக்கைதான்.
இன்னொரு புறத்தில் இலங்கைத்தீவில் தமிழர்களுக்கு அதிகூடிய உரிமைகள் வழங்கப்பட்டால் இந்திய துணைக்கண்டத்தில் ஏற்படுத்தபோகும் தாக்கங்களால் கொலுகொலுக்க போகும் இந்திய கூட்டாச்சி பற்றிய பாரதத்தின் அச்சம் மேற்குலகின் கைகளை ஓரளவுக்கு மேல் சுதந்திரமாக இயங்கவிடாது.
இவ்வளவுக்குள்ளாகவும் ஒரு தீர்வை வைக்க போகின்ற தமிழர் தரப்பினர் இப்போதே மாவட்ட சபை போன்ற தீர்வுகளுக்குள்ளும் மாகாணசபை போன்ற பொதிகளுக்குள்ளும் ஏதோ துளாவுவது போல தெரிகிறது.
சிங்களத்துக்கும் நோகாமல் மேற்குலகும் ஏற்றுக்கொள்வதான ஒரு தீர்வை வைப்பதிலேயே அவர்கள் மிக கவனமாக இருப்பது கடந்த சில நாட்களாக தெரிகிறது. ஆனால் தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதையே அவர்கள் கவனிக்க வேண்டும்.
77 தேர்தலில் போது தமிழீழக் கோரிக்கையை முன்வைத்து பெருவெற்றியடைந்த தமிழர் கூட்டணியினர் அதன்பின் தமிழர்களின் மனநிலையை புரிந்துகொள்ளாமல் வெறும் மாவட்ட சபைகளில் இறங்கியபோது மக்கள் எந்தவொரு தயவு தாட்சண்யமும் இன்றி அவர்களை வேரடி மண்ணோடு புரட்டி எறிந்ததை வரலாற்றில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.
77ல் யாழ் வீரமாகாளியம்மன் ஆலயத்தில் வீரவாளும் கேடயமும் கொடுத்து தளபதி என்று தோளில் தூக்கி பவனிவந்த அமிரை மாவட்ட சபையை ஏற்றவுடன் மக்கள் காலச் சகதிக்குள் தூக்கி வீசிவிட்டு அடுத்த கட்டத்துக்கு நகர்ந்ததை சரித்திர பக்கங்களில் பார்க்கவேண்டும்.
ஒரு அமைப்பு ஏன் தேவை என்பதை அந்த அமைப்பு அந்த மக்களின் அபிலாசைகளை எவ்வளவு தூரம் பிரதிபலிக்கிறது என்பதை வைத்தே அந்த மக்கள் கூட்டம் தீர்மானிக்கும்.
எல்லாம் இழந்து ஏதுமற்றிருக்கும் மக்கள் எது கொடுத்தாலும் ஏற்றுக்கொள்வர் என்ற நினைப்பு ‘பிச்சைஇடும்’ மனப்பாங்கு ஆகும்.
இந்த மக்கள் எல்லாவற்றையும் எதற்காக இழந்தார்கள் என்பதையே தீர்வுக் கோரிக்கையை முன்வைப்பவர்கள் கவனத்தில் எடுப்பார்களா என்பதை பார்ப்போம்.
மக்கள் இப்போது மிக விழிப்பாக இருக்கிறார்கள்.அவர்கள் இந்த இனத்தின் விடுதலைக்காக செய்யப்பட்ட அர்ப்பணிப்புகளின் உச்சங்களை எல்லாம் கண்டும் அதன் தியாகத்தை போற்றியும் வருபவர்கள்.
அதற்கு மாறான எதனையும் தமிழர்களின் கோரிக்கையாக முன்வைக்கும் எந்த அமைப்பையும் அவர்கள் தூக்கி எறிந்து விடுவார்கள்.
இந்த வரலாற்று குப்பைத்தொட்டிக்குள் இப்போதைய தமிழர் தரப்பாக மேற்குலகு நியமித்து இருப்பவர்கள் வீழாமல் இருக்க வேண்டுமானால் மக்களிடம் வரவேண்டும். மக்கள் என்ன சொல்கிறார்கள் என்று கேட்கவும் பார்க்கவும் வேண்டும்.
வருவார்களா இல்லை காலக்குப்பைக்குள் அள்ளுண்டு போகப் போகிறார்களா என்பதை அவர்களின் கோரிக்கையே தீர்மானிக்கும்.

No comments:
Post a Comment