Translate

Tuesday, 17 July 2012

தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்களின் வீடுகள் மீது இனந்தெரியாதவர்கள் இன்று அதிகாலை தாக்குதல்


news
 தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் இருவரின்  வீடுகள் மீது இனந்தெரியாதவர்கள் இன்று அதிகாலை தாக்குதல் நடத்தியுள்ளனர்.
 
நெல்லியடியிலுள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் எட்வேட் ஆனந்தராஜா,குடத்தனையிலுள்ள  தங்கராஜா காண்டீபன் ஆகியோரின் வீடுகள் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
 
கற்கல் மற்றும் கழிவு ஓயில் போன்றவற்றைக் கொண்டு  தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இதனால் யன்னல் கண்ணாடிகள் உடைந்து சேதமாகியுள்ளதுடன்  வீட்டுச் சுவர்களும் நாசமாகியுள்ளதாக பாதிக்கப்பட்ட உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
 
வவுனியா சிறையில் அரசியல் கைதிகள் தாக்கப்பட்டமைக்கு எதிராக நாளை ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த, தமிழ் தேசிய மக்கள் முன்னணி தயாரான நிலையிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
 
ஏற்கனவே வலிகாமம் பகுதியில் நில அபகரிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு திரும்பிய மக்கள் பயணித்த பேருந்து மீதும், இவ்வாறு கழிவு எண்ணெய் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment