Translate

Thursday 19 July 2012

மூவர் உயிர் காக்க தீக்குளித்த ஈகி செங்கொடியின் வாழ்க்கை ஆவணப்படமாகிறது!



மூவர் உயிர் காக்க தீக்குளித்த ஈகி செங்கொடியின் வாழ்க்கை ஆவணப்படமாகிறது!

19 07 12
இராசீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட, பேரறிவாளன், முருகன் சாந்தன் ஆகியோருக்கு தூக்குத் தண்டனையை இரத்து செய்ய வேண்டும் எனக்கோரி, தீக்குளித்து ஈகியான் காஞ்சிபுரம் தோழர் செங்கொடியின் வாழ்க்கைவரலாறு 'இப்படிக்கு தோழர் செங்கொடி' என்ற பெயரில் ஆவணப்படமாக எடுக்கப்பட்டு வருகின்றது.



தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழில் தொடர்ந்து 'பொன்னுசாமி' என்ற பெயரில் எழுதி வரும் திரு. வெற்றிவேல் சந்திரசேகர் இந்த ஆவணப்படத்தை இயக்குகிறார். இவர், இயக்குநர் 'பாலை' ம.செந்தமிழனிடம் துணை இயக்குநராக பணியாற்றுகிறார். உணர்வாளர்கள் நடத்தும் ஏஸ் சினிமாஸ்(யுஊநு ஊஐNநுஆயுளு)என்ற நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. மரண தண்டனைக்கு எதிரான முதல் ஆவணப்படமாக இப்படம் தடம் பதிக்கும் என படத்தின் இயக்குநர் வெற்றவேல் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து படக்குழுவினர் சார்பில் இயக்குநர் வெற்றிவேல் சந்திரசேகர்வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

மூன்று தமிழர்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி தீக்குளித்துதற்கொலை செய்து கொண்ட காஞ்சிபுரத்தைச் சேர்ந்த செங்கொடியின் வாழ்க்கைவரலாற்று ஆவணப்படுத்தை ஏஸ் சினிமாஸ் நிறுவனம் தயாரிக்க முன்வந்துள்ளது.

இருளர் பழங்குடியினர்இ காடும் காடு சார்ந்த இடங்களை வாழ்விடமாகக்கொண்டவர்கள். பாம்பு, எலி பிடிப்பதில் கைதேர்ந்தவர்கள். இருளர்களையும்இஇவர்களின் மரபு அறிவையும் தவிர்த்து விட்டு, பாம்பு பற்றிய ஆராய்ச்சியைமேற்கொள்வது அரிது.

ஆண் - பெண் சமத்துவம் இவர்களின் அடையாளங்களில் ஒன்று. வீடுகளில்ஆண்கள் சமைப்பது இவர்களிடம் சர்வசாதாரணம். இருளர்களின் இசை தனித்துவம்வாய்ந்தது. இருளர்கள் கலை உணர்வில் சிறந்து விளங்குபவர்கள். ஆடல்இபாடல்களில் தனித்துவம் பெற்றவர்கள். இசைக்கருவிகள் இல்லாத இருளர்வீடுகளே இல்லை.

காடுகள் அழிக்கப்பட்டதால் சமவெளிப்பகுதிக்குக் குடிபெயர்ந்து பாரம்பரியதொழிலை கைவிட்டு கொத்தடிமைகளாக கூலித் தொழிலாளிகளாக வாழ்ந்துவருகின்றனர். பழங்குடியினரான இருளர்களில் ஒருவர்தான் சரசு என்கிற செங்கொடி.

2011 ஆகஸ்ட் 28ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காஞ்சிபுரம் தாலுகாஅலுவலகத்தில் தன்னை தீக்கிரையாக்கிக் கொண்டவர், செங்கொடி. பழங்குடியினர்தற்கொலை என்பதை அறியாதவர்கள். இருளர்கள் உள்பட ஒடுக்கப்பட்டசமூகத்திற்காக பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று வந்த செங்கொடி சிறை சென்றகளப் போராளி. இசை, நாட்டியம், பாடல் என பன்முக திறமை கொண்டவர்.

மூன்றாம் வகுப்பை வரையே பள்ளிப் படிப்பை முடித்துள்ள செங்கொடி,லெனின், சேகுவாரா, பெரியார் உள்பட உலகத் தலைவர்கள் வாழ்க்கை வரலாற்றுநூல்களை படித்து அதன் படி வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்.

21 வயதான செங்கொடியின் தற்கொலைக்குப் பின்னால் இருப்பதுகோழைத்தனம் அல்ல. அநீதிக்கு எதிராய் கொண்ட பெருங்கோபமும், மூன்றுநிரபராதிகளின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்கிற லட்சியமும் செங்கொடியின்முடிவுக்குப் பின்னால் இருந்தன.

யாரிந்த செங்கொடி? தனிமனிதராய் அநீதிக்கு எதிராய் பொங்கியெழுந்தசெங்கொடியின் குடும்ப சூழல், அரசியல் பின்னணி என்ன? இவரது இந்த முடிவுஉண்மையில் சாதித்ததுதான் என்ன? போன்ற கேள்விகளுக்கு விடைகளைத் தேடியஎன்னுடைய பயணமே, 'இப்படிக்கு தோழர் செங்கொடி..' என்கிற ஆவணப்படம்.

இருளர் சமூகம் இன்னும் இருட்டில் தவித்துக் கொண்டிருக்கும் தறுவாயில்அவர்களின் பிரதிநிதியாக இருந்த செங்கொடியின் உடலில் பற்றிய நெருப்புஜூவாலையில் வெளிப்படும் இந்திய-தமிழக அரசுகளின் கோரமுகம் அப்பட்டமாகஅம்பலமாயிருக்கிறது. இந்தப் படம் செங்கொடி ஊடாக அரச பயங்கரவாதத்தைஅலசுகிறது. இவை எல்லாவற்றையும் விட இனிமேல் யாரும் இது போன்றதற்கொலை முடிவுகளை மேற்கொள்ளக் கூடாது என்பதையும் இந்த ஆவணப்படம்மூலம் வலியுறுத்தியிருக்கிறேன்.

செங்கொடி வாழ்க்கையை கண்முன் கொண்டு வந்து நிறுத்தும் மீட்டுருவாக்கம்செய்யும் சித்தரிப்புக் காட்சிகள் அடங்கிய பிரமாண்டமான இந்த ஆவணப்படத்தைஏஸ் சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கிறது. திரு. நியாஸ் முகமது ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு பணியை சிறப்புற செய்திருக்கிறார். படத்திற்கான பாடலை கவிஞர் கவிபாஸ்கர் எழுதுகிறார். படத்தின் விளம்பரங்களை பென்சில் டான்ஸ் ஸ்டுடியோஸ் திரு. சந்தோஷ் சிறப்புற வடிவமைத்திருக்கிறார். நண்பா டாக்கீஸ்நிறுவனத்தார் பட வெளியீட்டுக்கானப் பணிகளை ஒருங்கிணைக்கின்றனர்.

மரண தண்டனைக்கு எதிராக உருவாகும் முதல் தமிழ் ஆவணப்படும் இது என்ற பெருமையுடன் படத்தின் வேலைகளை நாங்கள் மனநிறைவுடன் செய்து வருகின்றோம். வருகிற ஆகஸ்ட் முதல் வாரம் இப்படத்தின் வெளியீட்டு விழாசென்னையில் நடைபெற இருக்கிறது. அதற்கான முறையான அறிவிப்பும் விரைவில் வெளியிடப்படும் என தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அச்செய்திக் குறிப்பில் அவர் கூறியுள்ளார்.

ஈகி செங்கொடியின் ஈகத்தை, தமிழ்த் தேசிய உணர்வாளர்களும், சனநாயக சக்திகளும் அவரவர்களது பகுதிகளிலும், இல்லங்களிலும் பரப்புரை செய்ய வேண்டும். அதற்கு இந்த ஆவணப்படத்தை நாம் கருவியாகக் கருதி, ஆதரிக்க வேண்டும்.

No comments:

Post a Comment