Translate

Thursday 19 July 2012

புனர்வாழ்வழிக்கப்பட்ட முன்னாள் போராளிகளை துன்புறுத்தும் இராணுவக் குற்றப்புலனாய்வுத் துறையினர். வெளியில் சொன்னால் மீண்டும் தடுப்பு முகாமாம்.


நாம் விசாரித்தமை தொடர்பாக யாரிடமும் சொல்லக்கூடாது. அதனையும் மீறிச் சொன்னால் மீண்டும் தடுப்பு முகாம் செல்ல நேரிடுமென புனர்வாழ்வழிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னால் போராளிகளை இராணுவப்புலனாய்வுத்துறையினர் எச்சரித்து வருகின்றனர்.

தடுப்பு முகாம்களிலிருந்து புனர்வாழ்வழிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்ட முன்னால் போராளிகளை மீண்டும் புலனாய்வுத்துறையினர் விசாரணை செய்துள்ளதுடன் கடுமையாகத் தாக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் குற்றத்தடுப்புலனாய்வுப் பிரிவினரால் வலுக்கட்டாயமாக இளைஞர்கள் அழைத்துச் செல்லப்பட்டு விசாரனை செய்யும் நடவடிக்கைகள் இடம் பெற்று வருகின்றன.
இப் பகுதிகளில் மோட்டார் சைக்கிலில் செல்லும் புலனாய்வுத்துறையினர் முன்னால் போராளிகளின் பெயர்களைக் கேட்டு விசாரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அத்தோடு அவர்களது புகைப்படங்களைக் காட்டி ஊர் மக்களிடமும் விசாரித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து அவர்களது வீடுகளுக்கு செல்லும் இத்தகைய மர்ம நபர்கள் குறித்த போராளிகளை வேறு இடங்களிற்கு வருமாறு அழைத்தும் சென்றுள்ளனர்.
இதனால் பெற்றோர்களின் மத்தியில் அச்சநிலை ஏற்பட்டுள்ளது. அதே நேரம் இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்ட விடயம் தொடர்பாகவோ அல்லது தாம் விசாரித்தமை தொடர்பாகவோ யாரிடமும் ஏதுவும் கூறக்கூடாது எனவும் எச்சரித்துள்ளனர். அத்துடன் இதனையும் மீறி யாரிடமாவது சொன்னால் மீண்டும் தடுப்பு முகாம்களுக்குச் செல்ல வேண்டி ஏற்படுமெனவும் அச்சுறுத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment