நேற்றிரவு வவுனியா நெளுக்குளத்திலுள்ள அவரது இல்லத்திற்கு திருவுடல் கொண்டு வரப்பட்டது. இன்றைய தினம் மாலை 4 மணி அளவில் நெளுக்குளம் இந்து மயானத்தில் நிமலரூபனின் திருவுடல் அடக்கம் செய்யப்பட இருக்கின்றது.
இந்த வணக்க நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினருடன் வவுனியா நகர சபை உப தலைவர் எம். எம். ரதன், வலி. வடக்கு உப தவிசாளர் சஜீவன், பாண்டியன்குளம் உப தவிசாளர் எஸ்.செந்தூரன் கிளிநொச்சி, மாவட்ட கட்சி அமைப்பாளர் வேழமாலிகிதன், நாடாளுமன்ற உறுப்பினரின் செயலாளர் பொன்.காந்தன் ஆகியோரும் வணக்கம் செலுத்தினர்.
நிமலரூபனின் இல்லத்தைச் சுற்றி பொலிஸார், படையினர் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவினர் குவிக்கப்பட்டுள்ள நிலையில், நிமரூபனின் உடலுக்கு சுதந்திரமாக மக்கள் வணக்கம் செலுத்த முடியாத சூழலில் இறுதி இடம்பெறுகின்றது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment