Translate

Wednesday, 25 July 2012

யாழ்ப்பாணத்தில் தமிழ் மொழி இரண்டாம் மொழியாக்கப்பட்டுள்ள பரிதாபம்; கண்டும் காணாமலுள்ள திணைக்களங்கள்


யாழ்ப்பாணத்தில் தமிழ் மொழி இரண்டாம் மொழியாக்கப்பட்டுள்ள பரிதாபம்; கண்டும் காணாமலுள்ள திணைக்களங்கள்
news
யாழ். குடாநாட்டில் அண்மைக் காலமாக அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவங்களின் வருகை அதிகரித்து வருகின்றது. அதனோடு இணைந்து சிங்கள மொழியும் வருகை தந்துள்ளமை  அனைவரும் அறிந்ததே

யாழ்.குடாநாட்டில் முக்கிய இடங்களில் இருக்கின்ற அரச நிறுவங்களின் பெயர்பலகைகளில் சிங்கள மொழியே முதன்மை மொழியாக காணப்படுகின்றமை வருத்தத்திற்குரியதே


யாழ். குடாநாடானது வ்ட கிழக்கு மாகணங்களில் அதிகமான தமிழர்கள் செறிந்து வாழும் பகுதியாகும் ஆனால் இங்கு வைக்கப்படும் பெயர் பலகைகளே சிங்கள மொழியினை முதன்மையாக கொண்டு காணப்படுகின்றன

இதனை அவதானித்த சிலர் இனிவரும் காலங்களில் தனிச் சிங்கள மொழிதான் பயன்படுத்தப்படும் என்று கூறி தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

இந்தப் பெயர் பலகைகள் அனைத்தும் தமிழர்களுக்கு ஒரு செய்தியினை சொல்லுகின்றது அதாவது சிங்களத்திற்கு கீழ் தான் தமிழர்கள் என்ற செய்தியினை செல்லுகிறதா?

No comments:

Post a Comment