Translate

Wednesday, 25 July 2012

கூட்டமைப்புக்கு வாக்களித்து தமிழர் பலத்தை நிரூபிக்கவும் அரியநேத்திரன் எம்.பி. வேண்டுகோள்


கூட்டமைப்புக்கு வாக்களித்து தமிழர் பலத்தை நிரூபிக்கவும் அரியநேத்திரன் எம்.பி. வேண்டுகோள்
news
அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடவுள்ளனர். எனவே, தமிழ் மக்கள் கூட்டமைப்புக்கு வாக்களித்து தமிழினத்தின் பலத்தை மீண்டும் ஒரு தடவை நிரூபித் துக்காட்ட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது:
 கிழக்கு மாகாணசபைத் தேர்தல் எம்மீது திட்டமிட்டுத் திணிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் தமிழரை ஓரங்கட்டலாம் என அரசு நினைத்து தேர்தலை நடத்தவுள்ளது. எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தத் தேர்தலுக்கு முகம்கொடுத்து வேட்பாளர்களைக் களமிறக்கியுள்ளது.
 
வேட்பாளர்கள் தெரிவுக்கு முன்னர் கூட்டமைப்பின் வேட்பாளர்களாக வரக்கூடியவர்கள் என நினைத்து சிலர் மீது விஷமிகள் கொலை அச்சுறுத்தல்களை நேரடியாகவும், மறைமுகமாகவும் விடுத்தனர். மட்டக்களப்பு மாவட்டத்தில்தான் அதிகளவில் அச்_றுத்தல்களை கூட்டமைப்பு உறுப்பினர்கள் எதிர்கொண்டனர்.
 
எனினும், அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் வேட்பாளர்களாகக் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட முன்வந்தனர். தற்போது எமது வேட்பாளர்கள் எதற்கும் பயப்படாது கிழக்கு மாகாணசபையில் தமிழ்த் தேசியத்தின் உரிமைகளை வென்றெடுக்க தேர்தலில் போட்டியிடவுள்ளனர்.
 
எமது வேட்பாளர்கள் எதிர்வரும் தினங்களில் வீடுவீடாகச் சென்று பிரசார நட வடிக்கைளை மேற்கொள்ளவுள்ளனர். தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து தமிழினத்தின் பலத்தை மீண்டும் ஒரு தடவை நிரூபித்துக் காட்ட வேண்டும்   என்றார். 

No comments:

Post a Comment