Translate

Friday 27 July 2012

தமிழர்களை மீண்டும் அடி முட்டாளாக்கும் கருணாநிதியின் டெசோ மாநாடு.


 1985 இல் ஆரம்பிக்கப்பட்ட தமிழீழ ஆதரவு அமைப்பினை (டெசோ) மறுபடியும் தூசி தட்டிக் கையிலெடுத்துள்ளார். தி.மு.க. தலைவர் கருணாநிதி.

இந்தியாவில் இரண்டு வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும் விடுதலைப்புலிகள் இயக்கம் மீதான தடை இந்த முறை இந்தியத் தேசிய ஒருமைப்பாட்டிற்கு தமிழீழக் கோரிக்கை அச்சுறுத்தலாக அமையுமென்ற புதிய குற்ற சாட்டை இந்தியா கூறியுள்ளது .


இதன் உள் நோக்கம் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலே . கடந்த சட்டமன்ற தேர்தல் தோல்வி காங்கிரசையும் , தி மு க வையும் புரட்டி போட்டுள்ளது . ஆளும் கட்சியான அதி மு க ஜெயலிதா, ஈழத் தமிழர்களுக்கு , ஆதரவாகவும் ,இலங்கை அரசிற்கு எதிராகவும் அவர் மேற்கொள்ளும் உறுதியான நடவடிக்கை தி மு கூட்டணியை அச்சமுற வைத்துள்ளது .

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான இந்த மக்கள் அலை தொடர்ந்து நீடித்தால் வரும் தேர்தலில் தோல்வி உறுதி என்பதை புரிந்து கொண்ட தெலுங்கன் கருணாநிதியின் வஞ்சக திட்டமே டெசோ மாநாடு .

இதன் மூலம் தமிழின துரோகி என்ற அவப் பெயரை துடைத்து விடலாம் .மீண்டும் பழைய உலக தமிழினத்தின் தலைவன் என்ற பட்டப் பெயரை சூட்டி கொள்ளலாம் என கனவு காண்கிறார் .அந்த கனவை நிறைவேற்ற டெசோ வை மீண்டும் கையில் எடுத்து இருக்கிறார் .

சோனியாவின் அடிவருடியான இவர்களின் கூட்டு திட்டமே டெசோ மாநாடு .இதன் ஒவ்வொரு செயல் பாடும் சோனியாவின் கடை கண் பார்வையிலேயே இயங்குகிறது .தமிழினத்தை அழித்து விட வேண்டும் என்று திட்டம் போட்டு இந்த கூட்டம் செயல் படுகிறது .

இறுதி கட்ட போரின் போது கருணாநிதி, உண்ணா நிலை நாடகம் நடத்தி போர் முடிந்து விட்டதாக அறிவித்து பல லட்சம் தமிழர்கள் கொல்லப்ப ட்டதை தமிழக தமிழர்கள் அறியா வண்ணம் இவர் செய்த சதி வேலையை தமிழக தமிழர்கள் உணர தொடகிவிட்டனர் . அடித்தட்டு தமிழர்களும் இதை உணரும் நாள் திராவிடத்தை வேரறுத்து ,தமிழர்கள் அரியணை ஏற்றி தமிழீழம் உருவாக அடித்தளம் அடையும் நாள் .

கருணாநிதியின் வஞ்சக வலையில் தமிழக மக்கள் , குறிப்பாக புதிதாக உருவாகும் தமிழீழ ஆதரவாளர்கள் விழாமல் இருக்க நமது பரப்புரையை தெளிவாக எடுத்து செல்வோம் .

இவருக்கு துணையாக செயல் படும் வஞ்சக தமிழக அரசியல் வாதிகள் மற்றும் , தலைவர்கள் யார் என்பதை விரைவில் நாம் அறிய போகிறோம் அவர்களை வீழ்த்துவதற்கும் வியுகம் அமைப்போம் .

திராவிட குடும்பத்தை வேரறுப்போம் .
தமிழரை அரியணையில் ஏற்றுவோம் .

No comments:

Post a Comment