Translate

Wednesday, 18 July 2012

நாம் ஹிந்தியரல்ல, நாம் திராவிடரல்ல, நாம் தமிழர்.


நாம் ஹிந்தியரல்ல, நாம் திராவிடரல்ல, நாம் தமிழர்.
2016 நிச்சயம் ! 2021 லட்சியம் !
நாம் தமிழர் சீமான் அறிவிப்பு !
சீமான் தேர்தலுக்கு தயாராகிறார்.

2016 சட்டசபை தேர்தலுக்கு நாம் தயாராகிறோம் . அதற்க்கான முன்னெடுப்புகள் ஆரம்பமாகி விட்டன. இப்போது இருக்கும் அரசாங்கங்கள் நமக்கானவை அல்ல. நமதானவையாய் அவை இருந்திருந்தால் ஈழத்தமிழனுக்கு இந்த நிலை ஏற்பட்டு இருக்காது. 


முல்லை பெரியாருக்கு இந்த போராட்டங்கள் தேவை இருந்து இருக்காது. தமிழகத்து மீனவன் இப்படி கடலுக்கு செல்ல பயந்துக் கொண்டு இருந்திருக்க மாட்டான். கூடங்குளம் அணுமின் நிலையம் இத்தனை வாட்டமாய் இங்கே வந்து அமர்ந்திருக்காது. காவிரி வந்திருக்கும், கிருஷ்ணா புரண்டிருக்கும். இது எதுவுமே நடக்காத காரணத்தால் இப்போதிருக்கிற அரசாங்கங்கள் நமதானவை அல்ல.

அப்படியானால் என்ன வேண்டும் ? நமக்கான ஒரு அரசு. தமிழ்த்தேசியத்திற்க்கான ஒரு அரசு. அது இது வரை இல்லை. அதை தரவே நாம் தமிழர் கட்சி . ஆம். 2016 இல் நாம் தேர்தலில் நிற்கிறோம். அதற்க்கு முன்னதாக 2015 ஆம் வருடம் திருச்சி மாநகரில் ஒரு பெரிய மாநாடு . தமிழகத்தில் 7 கோடி தமிழர்கள் இருபதாக சொல்லப்படுகிறது. கோடிக்கு 1 லட்சம் என்றாலும், 7 கோடிக்கு 7 லட்சம் பேரை திரட்டுகிறோம்.. திருச்சி மாநாட்டுக்கு 7 லட்சம் தமிழர்களை திரட்டுகிறோம் 2015 மே மாதம் 18 தேதி திருச்சி மாநகரில் நமது பிரமாண்டமான மாநாடு ! 7 லட்சம் பேருடன். அங்கே நாம் போட்டியிடும் தொகுதிகளையும், வேட்பாளர்களையும் அறிவிக்கிறோம். ஒரு வருட களப்பணி. பிறகு தேர்தல். வெற்றி. நமது பிரதிநிதிகள் சட்ட மாமன்றத்தில் .. இது உறுதி.
 

No comments:

Post a Comment