Translate

Thursday, 26 July 2012

இந்தியச் சிங்கள இனவெறிக் கூட்டுச்சதியின் கொடும் இன அழிவிற்கு பிறகும் இன்னும் இந்தியத்தின் வக்கிறம் தீரவில்லை.

தமிழகத்தில் இருப்பது அகதி முகாம்கள் அல்ல அவலச் சிறைக்கூடம். 
ஈழத்தாய் என சொறிதலுக்காக புகழாரம் செய்யப்பட்ட ஜெ நினைத்தால் ஒரே நாளில் இந்த அவலநிலை மாறிவிடும்தான். ஆனால் தன்னை அறியனை ஏற்றிய தமிழக அப்பாவித்தமிழர்கள் மேலேயே ஜெ வுக்கு அக்கறை இருந்ததில்லையே! 


சாதியம் தூக்கிச் சுமக்கும் தமிழர்கள் தமிழின விரோதிகளையும், தமிழினத்துரோகிகளையுமே தொடர்ந்து ஆட்சியில் அமர்த்திவருவதால் தொடரும் இழிநிலை!

தமிழகத்தில் தமிழீழமக்களுக்கு ஆதரவு குரல் கொடுக்கும் கட்சி அமைப்புகளாவது ஒரணியில் கூடி வலுவாய் எதிர்த்தாலே இந்தச் அகதிச் சிறைக்கூடங்களிலுருந்து தமிழர்கள் விடுதலை ஆகிவிடுவார்கள்!
ஆனால் அனைத்து அமைப்புகளும் தமிழகத்தின் ஈழத்தமிழ் அகதிச் சிறைகளுக்கு நீங்கள் என்னசெய்தீர்கள் என எவரும் தம்மை கேள்விக்குள்ளாக்கி விடக்கூடாது என்று
காரணப் போரட்டங்களையே ஒப்புக்காய் அரசியல் செய்து
முடித்துக் கொள்கிறார்கள்.

சாதித் தமிழராய் சிதறி கிடந்தாலும் தம் தொப்புள்கொடி உறவுகளுக்காய் துடித்துக்கொண்டுதான் தான் தமிழகத் தமிழர்கள் புழுங்குகிறார்கள்.
இவர்களை ஒன்றிணைக்க தமிழகத்தில் மக்கள் செல்வாக்கில் அரசியல் செய்யும் தலைமைகளுக்குத்தான் மனமில்லை, தமிழர்களின் துடிப்புகளை தனித்தனியே தமக்கு தெரிந்த வித்தைகளால் முடிந்தவரையில் அறுவடை செய்யும் வேலையைத்தான் தம் அரசியல் பிழைப்பிற்காய் அன்றும் இன்றும் செய்தே வருகிறார்கள்.

இல்லை எனில் ஏழுகோடிக்கு மேல் வாழும் மண்ணின்
மக்கள்தமிழகத்தில் தம் இனத் தமிழர்களுக்கு அவலம் விளைவிக்கமுடியுமா!
சிங்கள இனவெறியின் கோர கூட்டுச்சதியின் ஆட்டத்தைதான்
தடுக்க முடியவில்லை.
ஆனால் தமிழகத்தில் இந்த அகதிக் கொடும் சிறையிலிருந்துகூட விடுவிக்க இயலாத வக்கற்ற இழி அவல நிலை தொடருமா.

No comments:

Post a Comment