Translate

Tuesday, 17 July 2012

இன்று காலை THE HINDU மற்றும் NEW INDIAN EXPRESS நாளிதழ்களில் வெளி வந்து


இன்று காலை THE HINDU மற்றும் NEW INDIAN EXPRESS நாளிதழ்களில் வெளி வந்து உள்ள இரு வெவ்வேறு செய்திகள் நிச்சயம் உங்கள் கவனத்திற்கு வராமலே போய் விடும் அபாயத்தை உணர்ந்தே இந்தப் பதிவு.

முதல் நிகழ்வு பெங்களூருவில் நிகழ்ந்து உள்ளது.RIGHT TO EDUCATION சட்டப்படி 25% இடங்கள் ஏழை மாணவர்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்ற மத்திய அரசின் ஆணைப்படி தனியார் பள்ளி ஒன்றில் சேர்த்துக்கொள்ளப்பட்ட ஏழை குழந்தைகளை சொல்ல இயலாத அளவிற்கு கேவலப்படுத்தி உள்ளது.


 அந்த பள்ளி நிர்வாகம்.பள்ளி வழங்க வேண்டிய அடையாள அட்டைகள் கூட அவர்களுக்கு வழங்கப்படவில்லை.கடைசி வரிசையில் அமர வைக்கப்பட்ட அவர்கள் வீட்டுப்பாடம் கூட எழுதிவர அனுமதிக்கப்படவில்லை.உச்சகட்ட கொடுமையாக அந்த ஏழைக் குழந்தைகளின் தலைமுடியை வெட்டி வீட்டுக்கு அனுப்பி வைத்து உள்ளனர்(PICTURE).தனியார் பள்ளிகள் என்ன புடுங்கின என்று இனி யாரும் கேக்க முடியாது.உலகத்தில் உள்ள அத்தனை கெட்ட வார்த்தைகளிலும் திட்டிக் கொண்டே சாணியில் முங்கி எடுத்த செருப்பைக் கொண்டு அந்த பள்ளி நிர்வாகிகளை அடிக்க வேண்டுமா,வேண்டாமா ?
ஏழைகளின் நலனுக்கு
சட்டம் சாதிப்பதற்கு ஒன்றுமே இல்லை இந்த நாட்டில்.

இரண்டாவது நிகழ்வு மாவோயிஸ்ட் பிக்ராம் என்பவரின் கைது.மாவோயிஸ்ட் என்றவுடன் உங்கள் மனதில் எழும் பிம்பங்களை அழித்து விடுங்கள்.பிக்ராம் ஒய்வு பெற்ற நீதிபதி ஒருவரின் மகன்.அநேகமாக அனைத்து இந்திய மாணவர்களின் கனவு நிறுவனமான ஐ.ஐ.டி யில்(I.I.T.) படித்தவர்.இயல்பாகவே வசதியான குடும்பத்தில் பிறந்த,நன்கு கல்வி கற்ற பிக்ராம் நினைத்து இருந்தால் கோடிகளில் சம்பளம் பெற்றுக்கொண்டு பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிந்து கொண்டு இருக்கலாம்.ஆனால் அவரை ஆயுதம் ஏந்தி மத்திய இந்திய காடுகளில் அலைய வைத்தது எது? எந்த அநீதியைக் கண்டு மனம் வெறுத்து இந்த பாதையை அவர் தேர்ந்து எடுத்து இருக்கக் கூடும்..

இந்த இரண்டு நிகழ்வுகளுக்கும் தொடர்பு இல்லை என்று நம்புவோர் மீண்டும் முதலில் இருந்து வாசித்தால் உண்மை விளங்குமோ என்னமோ ?
 —

No comments:

Post a Comment