Translate

Wednesday, 18 July 2012

நாம் ஒன்றுமையானதும் எதிரியும் துரோகியும் வெளிச்சத்துக்கு வருகிறார்கள்....பாருங்கள்...


கனடாவில் சிங்கள அரசுடன் சேர்ந்து இயங்கும் டக்கிளஸ் தேவானந்தாவின் 50 மேற்பட்ட ஈபிடிபியினர் ஊடுருவி உள்ளனர். இதனை தமிழ் தேசிய செயற்பாட்டாளர்களின் வலைப் பின்னல் உறுதி செய்துள்ளது.



இவர்கள் பல மொட்டைத் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து மக்களைக் குழப்பும் பணிகளைச் செய்து வருகின்றனர். மேற்படி மெட்டை பிரசுரங்கள் 'மக்களே எந்த அமைப்போடும் இணைந்து வேலை செய்யாதீர்கள் நீங்களும் உங்கள் குடும்பமுமாக இருங்கள்' என்ற தொனியில் எழுதப்பட்டவையாகும். இவர்களில் பலரின் முகங்கள் பல வணிக நிறுவனங்களில் பெருத்தப்பட்ட வீடியோக் கமராக்களில் பதியப்பட்டுள்ளது.

மே 2009 பின்னர் இலங்கையில் இருந்து கனடாவுக்கு வந்தவர்கள் குறித்து விழிப்பாக இருங்கள்.
கனடாவில் 'மக்கள் அவை' என்ற அமைப்பும் 'நாடு கடந்த தமிழீழ அரசும்தான்' தமிழ்த் தேசிய செயற்பாட்டில் ஈடுபட்டு இருக்கின்றார்கள். இவ்விரு அமைப்புக்களும் ஒரு குடையின் கீழ் இயங்காவிடினும்...இறைமையுள்ள தமிழீழம் அமைப்பது என்ற இலச்சிய பயணத்தில் உறுதியுடன் உள்ளார்கள். மாவீரர் நாள் நிகழ்வு 'நிகழ்வெழுச்சி அகவம்' என்ற ஒரு குடையின் கீழ் சென்ற அண்டே வந்து விட்டது நீங்கள் அறிந்ததே.

நாம் ஒன்றுமையானதும் எதிரியும் துரோகியும் வெளிச்சத்துக்கு வருகிறார்கள்....பாருங்கள்...
 

No comments:

Post a Comment