Translate

Thursday 19 July 2012

TNAக்கு கிழக்கு மாகாண மக்கள் இம்முறை சிறந்த பாடத்தை கற்பிப்பாளர்கள் - பிள்ளையான் :


TNAக்கு கிழக்கு மாகாண மக்கள் இம்முறை சிறந்த பாடத்தை கற்பிப்பாளர்கள் - பிள்ளையான் :

 யாழ்ப்பாணத்தில் சர்வாதிகார அரசியலை முன்னெடுத்து வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு, கிழக்கு மாகாண மக்கள் இம்முறை சிறந்த பாடத்தை கற்பிப்பாளர்கள் என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

 
சம்பந்தன் - சுமந்திரன் - மாவை சேனாதிராஜா ஆகிய மூன்று பேர் கொண்ட குழு, சந்தர்ப்பவாத அரசியலில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரைவில் உடையும்.அவர்கள் ஐக்கியமாக இல்லை. நாங்கள் கிழக்கு மாகாணத்தில் உள்ள மூன்று இனங்களையும் ஒன்றிணைத்து தேர்தலில் களமிறங்குவோம் எனவும் அவர் கூறியுள்ளார்.
 
இம்முறை தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி 25 முதல் 27 ஆசனங்களை கைப்பற்றும் எனவும் முன்னாள் முதலமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட போவதில்லை என தீர்மானித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இம்முறை ஏன் போட்டியிடுகிறது எனவும் சிவநேசதுரை சந்திரகாந்தன் கேள்வி எழுப்பியுள்ளார். 

No comments:

Post a Comment