Translate

Thursday 19 July 2012

தப்பிவிட்டார் ஹக்கீம் வரவேற்கிறார் சம்பந்தன்


தப்பிவிட்டார் ஹக்கீம் வரவேற்கிறார் சம்பந்தன்
news
 கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதென்ற மு.காவின் முடிவை நான் வரவேற்கிறேன். அது ஒரு நல்ல முடிவு. அரசால் ஏமாற்றப்படுவதற்கு முன்னர் ஹக்கீம் ஏமாறாமல் வெளியேறியிருக்கிறார் என்றுதான் கூறவேண்டும். 

 
இவ்வாறு நேற்று "உதயனி'டம் கருத்துத் தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன்.
 
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மாகாணசபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது குறித்துக் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியவை வருமாறு:
ரவூப் ஹக்கீமின் இந்த முடிவை மக்களின் நலன்கருதி எடுக்கப்பட்ட முடிவாகவே நாம் கருதுகிறோம். தமிழ் பேசும் மக்கள் என்ற ரீதியில் தமிழர்களும், முஸ்லிம்களும் இணைந்து செயற் படவேண்டுமென்பதில் நாங்கள் மிகவும் உறுதியாக உள்ளோம். நாங்கள் இணைந்து செயற்படுவது வேறு எவருக்கும் எதிரான ஒரு விடயமாகக் கருதப்படக்கூடாது.
 
இரண்டு இனங்களுக்கும் ஏற்படும் நன்மை கருதி நாம் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும். இந்த விடயத்தில் நாங்கள் எப்போதும் தாராளமாக நடப்போம்.'' இப்படிக் குறிப்பிட்டார் சம்பந்தன் எம்.பி. 

No comments:

Post a Comment