Translate

Thursday 19 July 2012

மட்டக்களப்பில்13அரசியல் கட்சிகளும் 21 சுயேட்சைக்குழுக்களும் போட்டி _


  கிழக்கு மாகாண சபை தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 13அரசியல் கட்சிகளும் 21 சுயேட்சைக்குழுக்களும் போட்டியிடுகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட 34 வேட்புமனுப்பத்திரங்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்ட அரசாங்க அதிபருமான திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார். 



இதில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசியக்கட்சி, இலங்கை தமிழரசுக்கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் விடுதலை முன்னணி உட்பட 13 அரசியல் கட்சிகளும் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுகின்றன.

அத்தோடு 21 சுயேட்சைக்குழுக்களும் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுகின்றன.

வேட்புமனுப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டதையடுத்து நண்பகல் 12 மணி தொடக்கம் 1மணிவரை முறைப்பாடு செய்யும் நேரமாக அவகாசம் வழங்கப்பட்டது.

இதையடுத்து மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்களின் பிரதி நிதிகளுக்கான கூட்டம் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் சுயேட்சைக்குழுக்களுக்கு சின்னங்களும் இதன் போது வழங்கப்பட்டன. . _

No comments:

Post a Comment