
மட்டக்களப்பிலுள்ள அவரது அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி போட்டியிடுகின்றது. தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சார்பில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் சார்பில் மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் 12 வேட்பாளர்கள் போட்டியடுகின்றனர்.
இதில் மட்டக்களப்பில் 6 பேரும் அம்பாறையில் 3 பேரும், திருகோணமலையில் 3 பேரும் நாம் போட்டியிடுகின்றோம்.
இதில் மட்டக்களப்பு மாவட்டத்தில் குறைந்தது 5 ஆசனங்களையும், அம்பாறை மாவட்டத்தில் ஓரு ஆசனத்தையும் அதே போன்று திருகோணமலை மாவட்டத்தில் ஒரு ஆசனத்தையும் பெற்று தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்குள் அதிகமான ஆசனங்களை பெறும்.
அசைக்கமுடியாத நம்பிக்கையுடன் நாம் இத் தேர்தலில் இறங்கியுள்ளோம்.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்குள் அதிகமான ஆசனங்களை பெறும் கட்சிக்கே முதலமைச்சர் பதவி வழங்கப்படும் என தெரிவித்தார்.
No comments:
Post a Comment