Translate

Wednesday 18 July 2012

“பார் ஒன்றின் வாசலில் இளம்பெண் மானபங்கம் செய்யப்பட்டது தொடர்பான விசாரணையை அசாம் போலீஸ் நேர்மையாக மேற்கொள்ளாது”

“பார் ஒன்றின் வாசலில் இளம்பெண் மானபங்கம் செய்யப்பட்டது தொடர்பான விசாரணையை அசாம் போலீஸ் நேர்மையாக மேற்கொள்ளாது” என்று குற்றம் சாட்டி, இந்த விவகாரத்தை வெளியே கொண்டுவந்த தனியார் டி.வி சேனலின் செய்தி ஆசிரியர் ராஜினாமா செய்திருப்பது மீடியா வட்டாரங்களில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.


அசாமில் சில நாட்களுக்கு முன் பார் வாசலில் இளம்பெண் மானபங்கம் செயப்பட்டார் இதற்க்கு முதல்வர் தருண் கோகய் சொல்கிறார் “குற்றத்தை பார்த்த உடனே முதலில் அதை தடுக்க முயற்சி செய்திருக்க வேண்டும். அடுத்து போலீசுக்கும் தகவல் தந்திருக்க வேண்டும். அப்படிச் செய்யாமல் அதை வீடியோ எடுத்து டி.வி.யில் ஒளிபரப்பியது தவறு” என்று. டி.வி சேனல் மீதே குற்றம் சுமத்துகிறார். இபிரட்சனையால் நிருபர் கவுரவ் ஜோதி நியோக்” ஏற்கனவே ராஜினமா செய்துவிட்டார் இப்போது அந்த டி.வி சேனலின் செய்தி ஆசிரியர் அதானு புயான் ராஜினாமா செய்துள்ளார்.




முதல்வர் தருண் கோகய் புதிய பிரட்சனையை கிளப்பிருகிறார்...

வியாட்நாம் போர் உச்ச கட்டத்தில் இருந்தபோது போரினால் பாதிக்கப்பட்டு உயிருக்கு அஞ்சி ஒரு இளம் வயது சிறுமி நிர்வாணமாக பயத்துடன் ஓடிவந்ததை படம் பிடித்தார் ஒரு நிருபர் அது உலகம் முழுவது ஒரு அதிர்ச்சி அலையை அமெரிக்காவுக்கு எதிராக ஏற்படுத்தியது. இதானால் அமேரிக்கா போரில் இருந்து பின்வாங்கவேண்டிய சுழல் வந்தது. வியட்நாம் போர் வெற்றிபெற்றது...

இதில் அந்த நிருபர் போட்டோ எடுப்பதை நிறுத்திவிட்டு ஆடை கொடுத்து அவள் மானத்தை காப்ற்றிருக்க வேண்டும்மா..? ஒரு நிருபரின் வேலை என்ன.. வாத்து முட்ட தருண் கோகய் நிருபர் செய்தது தவறு என்று சொகிறார் மீடியா மீது பாய்கிறார்.

No comments:

Post a Comment