Translate

Friday, 10 August 2012

இலங்கை யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் ஐ.நா விசாரணைநடத்தப்பட வேண்டும் - AI


இலங்கை யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் ஐ.நா விசாரணை நடத்தப்பட வேண்டும் - AI
இலங்கை யுத்தக் குற்றச் செயல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பக்கச்சார்பற்றசுயாதீன விசாரணைகளை ஐக்கிய நாடுகள் அமைப்பு நடத்த வேண்டுமென சர்வதேச மன்னிப்புச் சபைகோரிக்கை விடுத்துள்ளது.
 
இலங்கையில் பாரியளவில் மனித உரிமை மீறல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக சர்வதேசமன்னிப்புச் சபையின் இந்தியாவிற்கான நிறைவேற்று அதிகாரி ஆனந்தபத்மநாபன் தெரிவித்துள்ளார்.
 
இந்தக் குற்றச் செயல்கள் ஒரு தலைப்பட்சமானது அல்ல எனவும் தமிழீழ விடுதலைப்புலிகளும் குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
சிறுவர் போராளிகளை படையில் இணைத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுடன்தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தொடர்பு இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
 
குற்றச் செயல்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகளை நடத்த வேண்டிய பாரியளவுபொறுப்பு இலங்கை அரசாங்கத்திற்கு காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு உள்ளிட்ட பல்வேறு பொறிமுறைமைகளின் மூலம் நியாயம் கிட்டும் என அரசாங்கம் வாக்குறுதி அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
 
எனினும், உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு பரிந்துரைகள் தொடர்பான தேசிய செயற்திட்ட அறிக்கை, சர்வதேச மற்றும் உள்நாட்டு சக்திகளை திருப்திபடுத்தும் நோக்கில் அமையப் பெற்றுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
 
ஐக்கிய நாடுகள் அமைப்பின் தலைமையின் கீழ் பக்கச்சார்பற்ற விசாரணைகளைநடத்துவதன் மூலம் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
விசாரணைகளின் அடிப்படையில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டியதுஅவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.
 
தமிழகத்தில் வாழும் இலங்கை அகதிகளுக்கு ஐக்கிய நாடுகள் பிரகடனத்தின்அடிப்படையில் நலன்களை வழங்க வேண்டியது மத்திய அரசாங்கத்தின் கடமையாகும் என அவர்சுட்டிக்காட்டியுள்ளார். டொசோ மாநாடு அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டது என அவர்குறிப்பிட்டுள்ளார்.
 
எனினும் , இந்த மாநாட்டில் தமிழர் பிரச்சினைகள் பற்றி குரல் எழுப்ப முடியும் எனஅவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

No comments:

Post a Comment